• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    மகாராஷ்டிரா: திடீரென சரிந்த கோவில் மேற்கூரை..!! 7 பேர் பரிதாப பலி.. பலர் படுகாயம்..!!

    மராட்டியத்தில் கோவில் மேற்கூரை சரிந்து விழுந்து 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Shanthi M. Sat, 20 Jun 2026 19:02:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    several-dead-after-under-construction-roof-collapses-at-temple-in-Maharashtra

    மராட்டிய மாநிலம் பர்பானி மாவட்டத்தில் உள்ள யஷ்வாடி கிராமத்தின் பிரசித்தி பெற்ற கோயிலில் ஏற்பட்ட துயரச் சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயிலின் முன்பகுதியில் அமைந்த சபா மண்டபத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் குறைந்தது 7 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 20 பக்தர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

    கோயிலில் தற்போது சில கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் 3.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. அப்போது கோயிலில் வழிபாட்டிற்காக வந்திருந்த பக்தர்கள் பலர் மேற்கூரை இடிந்து விழுந்த இடத்தில் சிக்கினர். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து அறிந்ததும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 

    தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருடன் இணைந்து போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இடிபாடுகளை அகற்றும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதுவரை மீட்கப்பட்ட காயமடைந்தவர்கள் பர்பானி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்த கார்! அதிகாலை நிகழ்ந்த விபத்தில் 8 இளைஞர்கள் பலி!!

    collapsed

    காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “கோயிலின் சபா மண்டப மேற்கூரை மாலை 3.30 மணி அளவில் திடீரென இடிந்து விழுந்தது. மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மருத்துவக் குழுக்கள் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இடிபாடுகளில் சிக்கிய அனைவரையும் உடனடியாக மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன” என்றார்.

    இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டு விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கியுள்ளது. கட்டுமானப் பணிகளின்போது பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. பர்பானி மாவட்டத்தில் உள்ள இந்தக் கோயில் பக்தர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடமாகும். வார இறுதி மற்றும் விழா நாட்களில் ஏராளமானோர் வருகை தருவது வழக்கம். 

    இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. உள்ளூர் மக்களும் தன்னார்வலர்களும் மீட்புப் பணிகளுக்கு உதவி வருகின்றனர். மீட்புப் பணிகள் முழுமையாக முடிவடைந்த பின்னர் மொத்த பலி எண்ணிக்கை மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை உறுதிப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
     
    இதையும் படிங்க: உ.பி.யில் சோக சம்பவம்: திடீரென இடிந்து விழுந்த பாலம்.. 6 பேர் பரிதாப பலி..!!

    மேலும் படிங்க
    மாணவர்களுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்..!! விளாத்திகுளம் பள்ளியில் அரங்கேறிய அவலம்..!!

    மாணவர்களுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்..!! விளாத்திகுளம் பள்ளியில் அரங்கேறிய அவலம்..!!

    தமிழ்நாடு
    அதிமுக எங்க பங்காளி.. பாஜக பகையாளி..!! அதிமுகவுடன் திமுக கூட்டணி வெச்சா என்ன தப்பு?? ஆர்.எஸ்.பாரதி அதிரடி..!!

    அதிமுக எங்க பங்காளி.. பாஜக பகையாளி..!! அதிமுகவுடன் திமுக கூட்டணி வெச்சா என்ன தப்பு?? ஆர்.எஸ்.பாரதி அதிரடி..!!

    அரசியல்
    என்னது எடப்பாடியின் அண்ணன் பொண்ணா..? யாருமா நீ..? வெளுத்து வாங்கிய அதிமுக..!

    என்னது எடப்பாடியின் அண்ணன் பொண்ணா..? யாருமா நீ..? வெளுத்து வாங்கிய அதிமுக..!

    தமிழ்நாடு
    வறண்ட தருமபுரியை வளமாக்கும் திட்டம்..! அமைச்சர் ஆனந்தை சந்தித்து கோரிக்கை மனுக் கொடுத்த MLA சவுமியா..!!

    வறண்ட தருமபுரியை வளமாக்கும் திட்டம்..! அமைச்சர் ஆனந்தை சந்தித்து கோரிக்கை மனுக் கொடுத்த MLA சவுமியா..!!

    தமிழ்நாடு
    ஸ்கூல் உங்க புகழ்பாடும் மேடை இல்ல..! முதல்வர் விஜயை வறுத்தெடுத்த வானதி சீனிவாசன்..!

    ஸ்கூல் உங்க புகழ்பாடும் மேடை இல்ல..! முதல்வர் விஜயை வறுத்தெடுத்த வானதி சீனிவாசன்..!

    தமிழ்நாடு
    திரைத் துறை பயிற்சி ... ஒரு பெண் உறுப்பினர் கூட இல்லை..! கனிமொழி தாக்கு..!

    திரைத் துறை பயிற்சி ... ஒரு பெண் உறுப்பினர் கூட இல்லை..! கனிமொழி தாக்கு..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share