தமிழகத்தில் மிக தீவிரமாக வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் தொடர்பாக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் உள்ள யாருக்கும் ஓட்டு போடும் உரிமை இல்லை என்று வந்தாலும் வரலாம் என்று கூறினார். நான் பேசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நமது ஓட்டுரிமை பறிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் நான் பயமுறுத்தவில்லை., இதுதான் உண்மை என்று கூறினார்.
தமிழ்நாட்டில் இருக்கும் எல்லோருக்கும் வாக்குப்பறி போகும் நிலை இருப்பதாக எச்சரித்த விஜய், வாக்குரிமை என்பது இந்திய அரசியல் சாசனம் நமக்கு அளித்த முதல் உரிமை என்று கூறினார். சிறப்பு வாக்காளர் திருத்த பணிகள் மூலம் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மக்களின் வாக்குரிமை பறிபோக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். கொஞ்சம் அசந்தாலும் லட்சக்கணக்கானோருக்கு ஓட்டு போடும் உரிமை பறிபோகும் என்று தெரிவித்தார்.

தமிழக வெற்றி கழக தோழர்களுக்கு எஸ் ஐ ஆர் படிவம் கிடைப்பதில்லை என்றும் இதை யார் செய்கிறார்கள் என்பது சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார். ஒரே மாதத்தில் எஸ் ஐ ஆர் கணக்கிட்டு படிவங்களை விநியோகம் செய்வது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: சட்டம் ஒழுங்கா... அப்படினா? காவல்துறையில் நிர்வாக குளறுபடி... தவெக விளாசல்...!
நம்முடைய பலத்தை காண்பிக்க வேண்டும் என்றும், அதற்கு வாக்குரிமை தான், வாக்கு தான் மிக முக்கியம் என்று தெரிவித்தார். ஓட்டு என்ற ஒன்று இருந்தால்தான் இந்த நாட்டையே காப்பாற்ற முடியும் என்று தெரிவித்தார். எஸ் ஐ ஆர் பணிகள் மூலம் சில பிரச்சினைகள் வர வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தவெக பதிவு செய்யப்பட்ட கட்சி... எங்களுக்கும் அழைப்பு கொடுக்கணும்... விஜய் கடிதம்...!