வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இறந்தவர்கள், மாற்று இடத்திற்கு சென்றவர்கள், புதியவர்கள் என பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு பெயர் திருத்தம், முகவரி மாற்றம் என திருத்தப் பணிகள் நடைபெறுவது வழக்கம்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்கின்றன. காரணம் தேர்தல் ஆணையம் பாஜக அரசுக்கு துணையாக செயல்படுவதாகவும் வாக்காளர் திருத்த பணிகள் மூலம் பொதுமக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் என்ற குற்றம் சாட்டி வருகின்றனர். அது மட்டுமல்ல அது வாக்குத்திருட்டு நடைபெற்று இருப்பதாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டு பேசி வருகிறார். இருப்பினும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நிச்சயம் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் நடத்தப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. வாக்காளர் திருத்தப்பட்டியல் மேற்கொள்ளும் பணிகளுக்கு தமிழக அரசு சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இனி தமிழக ஆம்னி பஸ் கேரளா போகாது..!! உரிமையாளர்கள் சங்கம் அதிரடி அறிவிப்பு..!! என்ன நடந்தது..??
இந்த நிலையில், கேரளாவில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலை சுட்டிக்காட்டி வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை ஒத்திவைக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் செயலாளர் பி. கே. குஞ்சாலி குட்டி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதையும் படிங்க: மத்திய அரசுடன் கைகோர்த்த கேரளா..!! 'பி.எம்.ஸ்ரீ' திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்து..!!