• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அமித் ஷா அருகே விஜய்... தொடங்கியது தென்மாநில முதல்வர்கள் மாநாடு... டி.கே.சிவக்குமாருக்கு காத்திருக்கும் சிக்கல்...!

    கோவளத்தில் தொடங்கிய தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு
    Author By Amaravathi Thu, 20 Aug 2026 11:17:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    southern-states-cms-meet-started

    சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு சென்னை அருகே கோவளத்தில் இன்று தொடங்கியது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு, நதிநீர் பங்கீடு, எல்லைப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து மாநாட்டில் ஆலோசிக்கப்பட உள்ளது.

    மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த மாநாடு நடைபெறாத நிலையில், தற்போது 31வது மாநாடு சென்னை அருகே கோவளத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தொடங்கியுள்ளது.

    இந்த மாநாட்டிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகிக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் மற்றும் லட்சத்தீவு ஆகியவை மாநாட்டின் உறுப்பினர்களாக உள்ளன.

    இதையும் படிங்க: புதுச்சேரி அரசியலில் பரபரப்பு... தமிழகம் வந்த அமித்ஷாவுக்கு திடீர் ஷாக் கொடுத்த புதுவை முதல்வர்...!

    மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று சென்னை வந்த அமித்ஷாவுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் இருந்து கோவளத்துக்குச் சென்ற அவரை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வரவேற்றார். தொடர்ந்து நடைபெற்ற இரவு விருந்தில் பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    தென் மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது, தொழில் முதலீடுகளை அதிகரிப்பது, மாநிலங்களுக்கு இடையேயான கூட்டுறவை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மாநாட்டில் ஆலோசனை நடைபெற உள்ளது.

    நீட் விவகாரம், தமிழகத்திற்கு தேவையான நிதியைப் பெறுவது உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக அவர் பேசலாம். அதேபோல், காவிரி நதிநீர் பிரச்சினையும் முக்கியமானதாக உள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை வழங்கியுள்ள நிலையில், அந்த உத்தரவுகளை கர்நாடக அரசு முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தமிழக முதலமைச்சர் வலியுறுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டி.கே.சிவக்குமாருக்கு சிக்கல்:

    குறிப்பாக, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே காவிரி மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் சூழலில் இந்த மாநாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும், கர்நாடகாவில் தமிழர்கள் மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் இரு மாநிலங்களுக்கு இடையேயான உறவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்நாடு மற்றும் கர்நாடக முதலமைச்சர்கள் ஒரே மாநாட்டில் சந்திக்கின்றனர்.

    சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்ல இருந்த நிலையில், தற்போதைய சூழல் சரியாக இல்லை என்றும், இப்போதைக்கு வர வேண்டாம் என்றும் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்திருந்தார்.

    இதனிடையே, தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தற்போது சென்னைக்கு வந்திருப்பது கவனம் பெற்றுள்ளது. இந்தச் சூழலில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜயும், கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமாரும் மாநாட்டின் போது தனியாக சந்தித்து பேச வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    அமித் ஷாவிடம் விஜய் வைக்கப்போகும் கோரிக்கை: 

    தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில், மாநிலங்களுக்கு இடையேயான போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க அனைத்து தென்மாநிலங்களையும் ஒருங்கிணைத்து தனிப்பட்ட டாஸ்க் போர்ஸ் அமைப்பது தொடர்பாக தமிழக முதலமைச்சர் வலியுறுத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது.

    ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் மற்றொரு மாநிலத்திற்கு போதைப்பொருள் கடத்தப்படுவது, அந்த மாநிலத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் அதன் பரவலை அதிகரிக்கக்கூடிய வகையில் அமையும். எனவே, அதனைத் தடுத்து நிறுத்தும் பட்சத்தில் போதைப்பொருள் ஒழிப்பில் அது முக்கியப் பங்காற்றும். இதனைத் தடுக்கும் நோக்கில் டாஸ்க் போர்ஸ் அமைப்பது தொடர்பாக தமிழக முதலமைச்சர் வலியுறுத்துவார் எனத் தெரிகிறது.

    அதேபோல், தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதி தொடர்பாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தமிழக முதலமைச்சர் எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழக காவல்துறையைப் பொறுத்தவரை, காவல்துறையை மேம்படுத்துவது மிகவும் முக்கியமானதாக உள்ளது. தமிழக காவல்துறையில் ஏராளமான காலிப் பணியிடங்கள் உள்ளன. பல்வேறு காரணங்களால் அந்தப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ள நிலையில், காவல்துறையை பலப்படுத்தவும், நவீனப்படுத்தவும் அதிகளவில் நிதி தேவைப்படுகிறது. எனவே, காவல்துறையை நவீனப்படுத்துவதற்கான நிதியையும் தமிழக முதலமைச்சர் கோருவார் என தகவல் கிடைத்துள்ளது.

    இதையும் படிங்க: அந்த பக்கம் அமித் ஷா, இந்த பக்கம் டி.கே.எஸ்... ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிப்பாரா விஜய்?... நாடே எதிர்பார்க்கும் தரமான சம்பவம்...!

    மேலும் படிங்க
    டிரம்ப் போட்ட மேப்புக்கு ஈரானின் பதிலடி! “கலிபோர்னியா எங்கள் பகுதி” என வெளியான பரபரப்பு வரைபடம்

    டிரம்ப் போட்ட மேப்புக்கு ஈரானின் பதிலடி! “கலிபோர்னியா எங்கள் பகுதி” என வெளியான பரபரப்பு வரைபடம்

    உலகம்
    ஈரானுக்கு எதிராக டிரம்ப் அடுத்த அதிரடி! “இதுவரை இல்லாத பொருளாதார போர்” - அமெரிக்கா கடும் எச்சரிக்கை

    ஈரானுக்கு எதிராக டிரம்ப் அடுத்த அதிரடி! “இதுவரை இல்லாத பொருளாதார போர்” - அமெரிக்கா கடும் எச்சரிக்கை

    உலகம்
    “திட்டமிட்டப்படி வரும் 24ம் தேதி போராட்டம்...” - எதிர்பாராத இடத்தில் இருந்து சி.எம். விஜய்க்கு வந்த வார்னிங்...!

    “திட்டமிட்டப்படி வரும் 24ம் தேதி போராட்டம்...” - எதிர்பாராத இடத்தில் இருந்து சி.எம். விஜய்க்கு வந்த வார்னிங்...!

    தமிழ்நாடு
    மேகதாது அணை! தமிழகம்-கர்நாடகா தண்ணீர் பிரச்சினை! சென்னையில் டி.கே.சிவக்குமார் பதில்!

    மேகதாது அணை! தமிழகம்-கர்நாடகா தண்ணீர் பிரச்சினை! சென்னையில் டி.கே.சிவக்குமார் பதில்!

    அரசியல்
    ரூ.1.54 லட்சத்துக்காக ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம்! 10-ம் வகுப்பு மாணவர்கள் செய்த அதிர்ச்சி காரியம்!

    ரூ.1.54 லட்சத்துக்காக ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம்! 10-ம் வகுப்பு மாணவர்கள் செய்த அதிர்ச்சி காரியம்!

    குற்றம்
    கடன் வாங்கிக் காரா?... இந்த ஊதாரித்தனம் தேவையா? - சி.எம்.விஜய் அறிவிப்பால் எரிமலையாய் வெடித்த சீமான்...!

    கடன் வாங்கிக் காரா?... இந்த ஊதாரித்தனம் தேவையா? - சி.எம்.விஜய் அறிவிப்பால் எரிமலையாய் வெடித்த சீமான்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share