2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஜனநாயகக் கடமையாற்றவும், வாக்களிக்கவும் சென்னையில் வசிக்கும் மக்கள் பெருந்திரளாகத் தங்கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்துச் சென்றனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் கடும் கூட்டம் காணப்பட்டது. ஆனால் சரியான பேருந்து வசதி செய்யப்படாததால் பல்வேறு மாவட்டங்களிலும் மக்கள் சொந்த ஊருக்கு வாக்களிக்க செல்ல முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகினர்.
குறிப்பாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்தி நிலையத்தில் மட்டும் கடந்த 22ம் தேதி இரவு 8 மணி முதல் அதிகாலை 6 மணி வரை 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பேருந்திற்காக காத்துக்கிடந்தனர். சிறப்பு பேருந்துகள் போதுமான அளவு இயக்கபடாததைச் சுட்டிக்காட்டி பொதுமக்கள் குற்றச்சாட்டிய நிலையில், வாக்களிட்துவிட்டு ஊர் திரும்புவோருக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் இதர நகரங்களுக்குத் திரும்ப ஏதுவாக 14,500-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஆம் ஆத்மி கூடாரத்தை காலி செய்த பாஜக... அடுத்து மாநிலங்களவையில் செய்யப்போகும் தரமான சம்பவம்... கதிகலங்கும் காங்கிரஸ்...!
அதன்படி, இன்று வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 1,295 சிறப்புப் பேருந்துகளும், பல்வேறு ஊர்களில் இருந்து முக்கிய நகரங்களுக்கு 2,500 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. நாளை பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு 3,184 சிறப்புப் பேருந்துகளும், மற்ற முக்கிய நகரங்களுக்கு 3,345 பேருந்துகளும் இயப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை சுமார் 66,000-க்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ள நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கப் பயணிகள் TNSTC இணையதளம் அல்லது மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சிறப்புப் பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து... ரிசர்வ் வங்கி எடுத்த அதிரடி முடிவு... இதுதான் உண்மையான காரணம்!