• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ரத்தக்களறியான இலங்கை சிறைச்சாலைகள்... அடுத்தடுத்து பலியாகும் கைதிகள்... காரணம் என்ன?

    இலங்கை சிறைகளில் அடுத்தடுத்து கலவரம்... 3 கைதிகள் உயிரிழப்பு; 23 பேர் காயம்! பாதுகாப்பு தீவிரம்
    Author By Amaravathi Sat, 08 Aug 2026 12:30:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Srilanka prison riots

    இலங்கையில் அடுத்தடுத்து சிறைகளில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. நாட்டின் இரண்டு சிறைகளில் ஏற்பட்ட மோதல்களில் மூன்று கைதிகள் உயிரிழந்துள்ள நிலையில், 23-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து முக்கிய சிறைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இலங்கை சிறைகளில் நீண்ட காலமாக நிலவி வரும் கடுமையான இடநெருக்கடி, போதைப்பொருள் கும்பல்களின் ஆதிக்கம் உள்ளிட்ட காரணங்களால் அவ்வப்போது கைதிகளுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. ஆனால், சமீப நாட்களில் அடுத்தடுத்து பல சிறைகளில் வன்முறை வெடித்திருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    கொழும்பிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குருவிட்ட சிறையில் வெள்ளிக்கிழமை காலை கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு கைதிகள் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காயமடைந்தனர். இந்த மோதல் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கையைத் தொடர்ந்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: அமெரிக்க குடியுரிமை பெற ‘பிரசவ சுற்றுலா’? முட்டுக்கட்டை போட்டார் டிரம்ப்! வெளியானது 2 புதிய உத்தரவுகள்!

    சிறைக்குள் போதைப்பொருள் அடங்கிய பை ஒன்று வெளியில் இருந்து கொண்டுவரப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையே குருவிட்ட சிறையில் ஏற்பட்ட வன்முறைக்கு உடனடி காரணமாக இருந்திருக்கலாம் என்றும் இலங்கை சட்டத்துறை அமைச்சர் ஹர்ஷனா நனயக்கார தெரிவித்துள்ளார்.

    அரசின் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான பதிலடி நடவடிக்கையாக இந்த வன்முறை அமைந்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    கொழும்பு மேகசின் சிறையிலும் கலவரம்: 

    இதற்கு முன்னதாக, கொழும்பில் உள்ள மேகசின் சிறையில் வியாழக்கிழமை இரவு சுமார் 40 கைதிகள் தங்களது அறைகளை உடைத்து கலவரத்தில் ஈடுபட்டனர்.

    இந்த வன்முறையில் ஒரு கைதி உயிரிழந்ததுடன், மேலும் 10 பேர் காயமடைந்தனர். இதன் மூலம் குருவிட்ட மற்றும் மேகசின் சிறைகளில் ஏற்பட்ட இரு சம்பவங்களிலும் மொத்தம் மூன்று கைதிகள் உயிரிழந்துள்ளனர்; 23 பேர் காயமடைந்துள்ளனர்.

    இரு சம்பவங்களையும் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக பாதுகாப்புப் படையினரும் காவல்துறையினரும் களமிறக்கப்பட்டனர். இதையடுத்து சிறைகளின் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    திறந்தவெளிச் சிறையிலும் போராட்டம்: 

    இதற்கிடையில், நீர்கொழும்பு அருகே உள்ள பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையிலும் வெள்ளிக்கிழமை கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சில கைதிகள் சிறைச்சாலையின் மீது ஏறி போராட்டம் நடத்தியதால் அங்கு பதற்றமான சூழல் உருவானது. இதையடுத்து ராணுவம் மற்றும் காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

    நெகம்போ பகுதியில் உள்ள திறந்தவெளிச் சிறையில் போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளைக் கலைக்க காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பின்னர் அங்கு நிலைமை அமைதிக்கு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிறைகளில் 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள்: 

    இலங்கையின் சிறைச்சாலை அமைப்பு கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

    நாடு முழுவதும் உள்ள சிறைகளின் மொத்த கொள்ளளவு சுமார் 10,000 கைதிகள் மட்டுமே என்ற நிலையில், தற்போது 39,000-க்கும் மேற்பட்டோர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அளவுக்கு அதிகமான கூட்ட நெரிசல் சிறைகளுக்குள் பதற்றத்தை அதிகரிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

    குறிப்பாக போதைப்பொருள் குற்றங்களில் கைது செய்யப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதும், வழக்குகள் நீண்ட காலம் நிலுவையில் இருப்பதும் சிறைகளில் கூட்ட நெரிசலை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    ஏற்கனவே நடந்த கொடூரம்: 

    இலங்கையில் கடந்த மாதம் நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட மிகப்பெரிய கலவரம், அந்நாட்டின் சிறை வரலாற்றில் சமீப ஆண்டுகளில் ஏற்பட்ட மிகக் கொடிய வன்முறை சம்பவங்களில் ஒன்றாக அமைந்தது.

    அப்போது போட்டி போதைப்பொருள் கும்பல்களைச் சேர்ந்த கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் இரண்டு நாட்கள் நீடித்தது. அந்த வன்முறையில் கைதிகள் மற்றும் சிறை ஊழியர்கள் உட்பட 26 பேர் உயிரிழந்ததாக சமீபத்திய சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 100 பேர் காயமடைந்தனர்.

    அந்த சம்பவத்துக்குப் பிறகும் இலங்கை சிறைகளில் பதற்றம் முழுமையாக தணியாத நிலையில், தற்போது மீண்டும் அடுத்தடுத்து கலவரங்கள் ஏற்பட்டுள்ளன.

    மேலும், ஆகஸ்ட் தொடக்கத்தில் மஹரா சிறையிலும் கலவரம் ஏற்பட்டது. அந்தச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், ஆறு பேர் காயமடைந்தனர். மஹரா சிறையில் சுமார் 4,100 கைதிகள் இருந்ததாகவும், அதன் கொள்ளளவை விட நான்கு மடங்கு அதிகமான கைதிகள் அங்கு அடைக்கப்பட்டிருந்ததாகவும் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

    ‘போதைப்பொருள் கும்பல்களின் ஆதிக்கமா?’

    தொடர்ச்சியாக சிறைகளுக்குள் ஏற்பட்டு வரும் இந்த வன்முறைகளுக்கு போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையேயான மோதல்கள் முக்கிய காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

    அதே நேரத்தில், பல சிறைகளில் ஒரே காலகட்டத்தில் வன்முறை மற்றும் போராட்டங்கள் வெடித்திருப்பது திட்டமிட்ட நடவடிக்கையா என்ற கோணத்திலும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சில சம்பவங்கள் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து இலங்கையின் முக்கிய சிறைகளில் ராணுவம் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    தொடர் கலவரங்களுக்கான அடிப்படை காரணம் என்ன, சிறைகளுக்குள் போதைப்பொருள் எவ்வாறு கொண்டு செல்லப்படுகிறது, இதன் பின்னணியில் செயல்படும் கும்பல்கள் யார், சிறைகளில் நிலவும் கடுமையான இடநெருக்கடியை எவ்வாறு சமாளிப்பது என்பது தொடர்பாக இலங்கை அரசு தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

    ஒருபுறம் போதைப்பொருள் கும்பல்களின் ஆதிக்கம் குறித்த குற்றச்சாட்டுகளும், மறுபுறம் கைதிகளின் எண்ணிக்கையை சமாளிக்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ள சிறை நெருக்கடியும் இணைந்து, இலங்கையின் சிறைச்சாலை அமைப்பில் மிகப்பெரிய சவாலை உருவாக்கியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! பொன்னி, பாசுமதி அரிசி விலை கிடுகிடு உயர்வு! பின்னணி என்ன?

    மேலும் படிங்க
    தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் களமிறங்கும் தவெக ஆதரவு எம்.பி.க்கள்!

    தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் களமிறங்கும் தவெக ஆதரவு எம்.பி.க்கள்!

    தமிழ்நாடு
    சந்தைக்கு வருவதற்குள்.. முன்பதிவில் பட்டையைக் கிளப்பிய சாம்சங் ஃபோல்டபிள் போன்கள்!!

    சந்தைக்கு வருவதற்குள்.. முன்பதிவில் பட்டையைக் கிளப்பிய சாம்சங் ஃபோல்டபிள் போன்கள்!!

    மொபைல் போன்
    கரூர் அரசுப்பணி விவகாரம்..! தவிக்கும் குடும்பங்கள்..!! வரும் 14ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை..!!

    கரூர் அரசுப்பணி விவகாரம்..! தவிக்கும் குடும்பங்கள்..!! வரும் 14ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை..!!

    தமிழ்நாடு
    “அந்த மாதிரி ஆண்களே குறி...”  - ஆப் மூலம் பணம் பறிக்கும் தில்லாலங்கடி கும்பல் சிக்கியது எப்படி? - பகீர் பின்னணி...!!

    “அந்த மாதிரி ஆண்களே குறி...” - ஆப் மூலம் பணம் பறிக்கும் தில்லாலங்கடி கும்பல் சிக்கியது எப்படி? - பகீர் பின்னணி...!!

    குற்றம்
    திமுகவை அப்படியெல்லாம் முடக்க முடியாது... சி.எம்.விஜய்க்கு கிளாஸ் எடுத்த எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்...!

    திமுகவை அப்படியெல்லாம் முடக்க முடியாது... சி.எம்.விஜய்க்கு கிளாஸ் எடுத்த எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்...!

    அரசியல்
    கிண்டி சிட்கோ நில வழக்கு..! மா.சுப்பிரமணியன், மனைவி மீது குற்றச்சாட்டு பதிவு... பரபரப்பு திருப்பம்..!!

    கிண்டி சிட்கோ நில வழக்கு..! மா.சுப்பிரமணியன், மனைவி மீது குற்றச்சாட்டு பதிவு... பரபரப்பு திருப்பம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் களமிறங்கும் தவெக ஆதரவு எம்.பி.க்கள்!

    தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் களமிறங்கும் தவெக ஆதரவு எம்.பி.க்கள்!

    தமிழ்நாடு
    கரூர் அரசுப்பணி விவகாரம்..! தவிக்கும் குடும்பங்கள்..!! வரும் 14ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை..!!

    கரூர் அரசுப்பணி விவகாரம்..! தவிக்கும் குடும்பங்கள்..!! வரும் 14ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை..!!

    தமிழ்நாடு
    “அந்த மாதிரி ஆண்களே குறி...”  - ஆப் மூலம் பணம் பறிக்கும் தில்லாலங்கடி கும்பல் சிக்கியது எப்படி? - பகீர் பின்னணி...!!

    “அந்த மாதிரி ஆண்களே குறி...” - ஆப் மூலம் பணம் பறிக்கும் தில்லாலங்கடி கும்பல் சிக்கியது எப்படி? - பகீர் பின்னணி...!!

    குற்றம்
    திமுகவை அப்படியெல்லாம் முடக்க முடியாது... சி.எம்.விஜய்க்கு கிளாஸ் எடுத்த எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்...!

    திமுகவை அப்படியெல்லாம் முடக்க முடியாது... சி.எம்.விஜய்க்கு கிளாஸ் எடுத்த எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்...!

    அரசியல்
    கிண்டி சிட்கோ நில வழக்கு..! மா.சுப்பிரமணியன், மனைவி மீது குற்றச்சாட்டு பதிவு... பரபரப்பு திருப்பம்..!!

    கிண்டி சிட்கோ நில வழக்கு..! மா.சுப்பிரமணியன், மனைவி மீது குற்றச்சாட்டு பதிவு... பரபரப்பு திருப்பம்..!!

    தமிழ்நாடு
    திமுகவின் புறக்கணிப்பு முறையற்றது.! அவங்களுக்கு அக்கறை இல்ல..!! அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி.!

    திமுகவின் புறக்கணிப்பு முறையற்றது.! அவங்களுக்கு அக்கறை இல்ல..!! அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி.!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share