காதலிக்கப்பட்டு ஏமாற்றப்படுவதால் ஏற்படும் விரக்தியை வெளிப்படுத்த முடியாமல் பல இடங்களில் கொலைச் சம்பவங்கள் நடப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. தான் வைத்திருந்த காதலை என்ன செய்வதென்று தெரியாமல் ஏமாற்றப்பட்டது நினைத்து நினைத்து, அவை கோபமாக மாறி பல அதிர்ச்சியூட்டும் குற்றச்சம்பவங்கள் நடக்கின்றன. அப்படி, ஆசை ஆசையாக காதலித்து திருமணம் நிச்சயமான பின்பு, வேறொரு ஆணுடன் காதலி பழகி வந்ததால் ஆத்திரமடைந்த காதலன் சரமாரியாக கத்தியால் கத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கிறிஸ்தவ கண்டிகை பகுதியில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த சௌந்தர்யா என்பவர் அறை எடுத்து தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியில் உள்ள தினேஷ் என்பவருடன் சௌந்தர்யாவுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் தினேஷ் - சவுந்தயாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இந்த நிலையில், சவுந்தர்யா வேறொரு ஆணுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இது தினேஷுக்கு தெரியவர, தன்னுடன் நிச்சயம் செய்த காதலி வேறொரு ஆணுடன் பழகி வந்ததால் ஆத்திரம் அடைந்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். சவுந்தர்யாவின் கை,கால்,முகம் என பல இடங்களில் சரமாரியாக குத்திக் கொலை செய்த தினேஷ் அங்கிருந்து தப்பியுள்ளார்.
இதையும் படிங்க: கிட்னி திருட்டு.. கூண்டோடு சிக்கும் புரோக்கர்கள்! ஹாஸ்பிடல்களுக்கு பறந்த நோட்டீஸ்.. அடுத்தடுத்த உத்தரவுகள்..!
இந்த நிலையில், காதலி சௌந்தர்யாவை கொலை செய்துவிட்டதாக கூறி நாகையில் தினேஷ் சரணடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தன்னுடன் நிச்சயமான காதலி வேறொரு ஆணுடன் பழகியதால் ஆத்திரமடைந்த காதலன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: அணுஅணுவாக சித்திரவதை.. மனைவியை கொடூரமாக தாக்கிய காவலர்! தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை..!