மனிதர்களைப் போலவே சிந்திக்கும் கணினிகளை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் தொடங்கப்பட்ட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மனித இனத்தை அழிக்கும் கருவியாக மாறி வருகிறதோ என சந்தேகத்தை கிளப்பி வருகின்றனர். ஒருபுறம் ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சி ஐடி முதற்கொண்டு பல்வேறு துறைகளிலும் மனிதர்களுக்கு வேலையில்லாமல் செய்யக்கூடிய அபாயம் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றன.
தற்போது சீனாவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள வீடியோ, தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் உடல் உழைப்பு தேவைப்படக்கூடிய எந்த துறைகளிலும் மனிதனுக்கு வேலையில்லாமல் போகும் அபாயத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.
சீன நிறுவனம் ஒன்று நூற்றுக்கணக்கான மனித உருவ ரோபோக்கள் அணிவகுத்து செல்லக்கூடிய வீடியோவை வெளியிட்டு உலக நாடுகளை மிரள வைத்துள்ளது. ஷென்செனை தளமாகக் கொண்ட UBTECH ரோபாட்டிக்ஸ் பகிர்ந்துள்ள இந்த காணொளியில் எந்திரன் படம் பாணியில் நூற்றுக்கணக்கான ரோபோக்கள் ஒரே இடத்தில் அணிவகுத்து நிற்பதை கண்டு நமது கண்களை நம்மாலேயே நம்ப முடியவில்லை.
இதையும் படிங்க: டைம் தான் வேஸ்ட்... அண்ணாமலைக்கு எதிரான வழக்கை ரத்து செய்த சுப்ரீம்கோர்ட்...!
UBTECH நிறுவன் அதன் வாக்கர் S2 எனப்படும் மனித உருவ ரோபோ உற்பத்தியை தொடங்கியதை இந்த வீடியோ மூலம் உறுதிஇந்த வீடியோ மூலம் உறுதி செய்துள்ளது.
உலகிலேயே முதல் மனித உருவ ரோபோக்களான இவை தனக்குத் தானே பேட்டரி மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டவை என்றும், இம்மாத இறுதியில் டெலிவரி தொடங்கும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த மனித உருவ ரோபோக்கள் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட உள்ளன. சிச்சுவான் மாகாணத்தின் ஜிகோங்கில் உள்ள ஒரு நிறுவனத்திடமிருந்து 159 மில்லியன் யுவானுக்கும், இது குவாங்சியில் உள்ள ஒரு தரவு மையத்துடன் 126 மில்லியன் யுவானுக்கும், வாகன ஏற்றுமதி நிறுவனம் ஒன்றிற்கு 100 மில்லியன் யுவானுக்கும் ஆர்டரைப் பெற்றதாக UBTech தெரிவித்துள்ளது.
They said it looked too perfect to be real.
But perfection isn't fabricated—it's delicately engineered.
This is the historic mass delivery of UBTECH (优必选) Walker S2.
The next era of intelligent manufacturing is here.
Let's build it together!#WalkerS2 #HumanoidRobots… pic.twitter.com/aFzjw4qM0g
— UBTECH Robotics (@UBTECHRobotics) November 14, 2025
இதையும் படிங்க: திக்... திக்... காட்சிகள்....!! கண் இமைக்கும் நேரத்தில் சீட்டு கட்டு போல் சரிந்த பிரம்மாண்ட பாலம்...!