அண்ணா பல்கலைக்கழக வழக்கில் தன்னிடம் ஆதாரம் இருப்பதாக சொன்ன அண்ணாமலையை விசாரிக்க காதல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் தீர்ப்பு வெளியாகி உள்ள சூழ்நிலையில் பல பகிர் கிளப்பும் தகவல்களை அண்ணாமலை வெளியிட்டார். அந்த வீடியோவில் அண்ணாமலை பேசியதாவது; டிசம்பர் 23ஆம் தேதி சம்பவம் நடந்த நிலையில் அதன் பிறகு ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். டிசம்பர் 25ஆம் தேதி ஞானசேகரன் கைது செய்யப்பட்ட பின் எஃப் ஐ ஆர் விவரம் கசிய விடப்பட்டது. சம்பவம் நடந்த போது ஞானசேகரனின் செல்போனில் இருந்து ஒரு காவல்துறை அதிகாரிக்கு அழைப்பு சென்றுள்ளது. மீண்டும் அந்த அதிகாரி ஞானசேகரனை அழைத்துள்ளார்.
இதற்கிடையில் டிசம்பர் 24 ஆம் தேதி கோட்டூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு செல்வதற்கு முன்பாக ஞானசேகரன் திமுக நிர்வாகி கோட்டூர் சண்முகத்திடம் ஐந்து முறை பேசி இருக்கிறார். விசாரணைக்கு சென்று வந்த பிறகு ஒருமுறை பேசி இருக்கிறார். ஞானசேகரனிடம் பேசிய பிறகு கோட்டூர் சண்முகம் அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் பேசியிருக்கிறார்.

இதற்கு நடுவில், டிசம்பர் 23 டிசம்பர் 24, 25, 26 என மொத்தமாக நான்கு நாட்களில் கோட்டூர் சண்முகம், அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி செய்யும் நடராஜனும் 13 முறை பேசியிருக்கிறார்கள். இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதா? யாரைக் காப்பாற்ற இந்த பதற்றம் என அண்ணாமலை கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த வழக்கு தொடர்பான பல விடை தெரியாத கேள்விகள் இண்ணமும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கொம்பு முளைச்சிருக்கா? ஒருமையில் பேசி செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அண்ணாமலை...!
ஞானசேகரன் யாருடன் பேசினார் என்பதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாக அண்ணாமலை கூறியிருந்தார். இந்த நிலையில், அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தவறான தகவலை வெளியிட்டு இருந்தால் அண்ணாமலையை தண்டிக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அரசியல் கட்சியினர் கூறும் கருத்துக்களுக்கு எல்லாம் நீதிமன்ற நேரத்தை வீணடிக்க முடியாது. என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. இதற்கிடையில், உயர்நீதி மன்றத்தின் உத்தரவின் தலையிட விரும்பவில்லை என்று என கூறி அண்ணாமலைக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையும் படிங்க: என்ன ஆதாரம் இருக்கு? அண்ணாமலை கிட்ட விசாரிக்கணும்! உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்…!