நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று பெரும் அமளி ஏற்பட்டது. பட்ஜெட் கூட்டத் தொடரின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் ராணுவ தலைவர் ஜெனரல் எம்.எம். நரவனேயின் நினைவுக்குறிப்பு புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட 2020 இந்தியா-சீனா எல்லை மோதல் விவரங்களை ராகுல் காந்தி அவையில் எழுப்ப முயன்றபோது, அது தடை செய்யப்பட்டது.
இதனால் எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷமிட்டு, காகிதங்களை கிழித்து சபாநாயகர் இருக்கை நோக்கி வீசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த அமளியால் அவை பலமுறை இடைநிறுத்தப்பட்டது. பின்னர், மதிய அமர்வில் சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெற்ற விவாதத்திற்குப் பிறகு, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் "ஒழுங்கற்ற நடத்தை" காரணமாக 9 எம்பிக்கள் நடப்பு கூட்டத் தொடர் முழுவதற்கும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

எதிர்க்கட்சி எம்பிக்கள் காகிதங்களைக் கிழித்து சபாநாயகர் மேடை நோக்கி வீசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது அவையின் ஒழுங்கை மீறிய செயலாகக் கருதப்பட்டது. இதையடுத்து தீர்மானம் ஒன்று முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜு தீர்மானம் கொண்டு வந்தார். அதில், அவையில் குழப்பம் ஏற்படுத்தியதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அதிக திமிரை அடக்கணும்.. மதுரை வடக்கு தொகுதியில் போட்டி..! மாணிக்கம் தாகூர் எம்பி வலியுறுத்தல்..!
மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை என சஸ்பெண்ட் செய்யப்பட்ட MP சு. வெங்கடேசன் கூறினார். ஜனநாயகத்தின் உயிர்நாடியான விவாதமரபை முற்றிலும் சீர்குலைத்து நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கும் பாஜக அரசை எதிர்த்து குரல் கொடுத்ததற்காக தான் உள்ளிட்ட எட்டு உறுப்பினர்கள் அவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக கூறினார். தேசபாதுகாப்பிற்கும், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்குமான எங்களின் குரல் பாஜகவின் அதிகாரத்திற்கு அடிபணியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீலகிரிக்கு ராகுல் காந்தி வருகை... மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு..!