முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு அமைந்த பிறகு, அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கக் கூடாது என்றும், லஞ்சம் கேட்கப்பட்டாலோ அல்லது பெறப்பட்டாலோ பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்றும் அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அரசு அலுவலகங்களில் தொடர்ந்து திடீர் சோதனைகளை மேற்கொண்டனர்.
அந்த வகையில், இன்று தமிழ்நாடு முழுவதும் 35 வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அந்தச் சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூ.13 லட்சத்து 78 ஆயிரத்து 250 ரொக்கப் பணமும், சந்தேகத்திற்கிடமான வகையில் ஜி-பே (GPay) மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டதாகக் கருதப்படும் 68 லட்சத்து 32 ஆயிரத்து 582 பணப் பரிவர்த்தனைகளும் கண்டறியப்பட்டுள்ளன. மொத்தமாக 82 லட்சத்து 10 ஆயிரத்து 832 மதிப்பிலான முறைகேடுகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
35 இடங்களில் நடைபெற்ற இந்தச் சோதனையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சோதனையில் அதிகபட்சமாக கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ரூ.15 லட்சத்து 33 ஆயிரத்து 654 மதிப்பிலான தொகை கண்டறியப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: காலையிலேயே பரபரப்பான தமிழகம்.. களத்தில் இறங்கிய அமலாக்கத்துறை.. அதிரடி ரெய்டு..!!
மொத்தத்தில், ஜி-பே மூலம் 68 லட்சத்து 32 ஆயிரத்து 582 மற்றும் ரொக்கமாக 13 லட்சத்து 78 ஆயிரத்து 250 என மொத்தம் 82 லட்சத்து 10 ஆயிரத்து 832 முறைகேடாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணையின் முடிவில் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கிலோ கணக்கில் வைரம், தங்கம், வெள்ளி... குவியல் குவியலாய் பணம்... ரெய்டில் திகைத்துப் போன அதிகாரிகள்...!