சிவகங்கை அருகே மேலமங்கலத்தில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியின் போது பிரபல ரவுடி சுள்ளான் மதன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 26 வயதான மதன், பல்வேறு கொலை மற்றும் குற்ற வழக்குகளில் தொடர்புடைய சரித்திரப் பதிவேட்டு ரவுடியாக அறியப்பட்டவர். இரட்டைக் கொலை உள்ளிட்ட சுமார் 15 வழக்குகள் அவர் மீது நிலுவையில் இருந்தன.
2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொல்லங்குடி அருகே மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயசூர்யா மற்றும் சுபாஷ் ஆகிய சகோதரர்கள் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் மதன் முக்கியக் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டிருந்தார். அந்த வழக்கு ஜல்லிக்கட்டு அல்லது மஞ்சுவிரட்டில் மாடு பிடிப்பது தொடர்பான தகராறில் இருந்து உருவானதாகக் கூறப்படுகிறது. பின்னர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் அடைக்கப்பட்ட அவர், சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.அக்டோபர் 18 ஆம் தேதி ஒக்கூர் அருகே மேலமங்கலத்தில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியைக் காணவும் தனது காளையைப் பங்கேற்க வைக்கவும் மதன் நண்பர்களுடன் சென்றிருந்தார்.

மதியம் சுமார் ஒன்று முதல் இரண்டு மணி வரை பள்ளிக்கூடம் அருகே நின்றுகொண்டிருந்த போது, ஐந்து இருசக்கர வாகனங்களில் ஆயுதங்களுடன் வந்த சுமார் பதினொரு பேர் கொண்ட கும்பல் அவரைச் சூழ்ந்தது. தப்பி ஓடிய மதனை அந்தக் கும்பல் விடாமல் விரட்டிச் சென்று அருகிலிருந்த கரும்புத் தோட்டத்திற்குள் புகுந்து சரமாரியாக வாள் மற்றும் அரிவாளால் வெட்டியது. கை, கால், முகம் உள்ளிட்ட உடலின் பல பாகங்களில் கடும் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டு மதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையும் படிங்க: மருத்துவர்களுக்கு செக்..! மருத்துவமனைகளில் ரீல்ஸ் வெளியிட தடை..!
இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில சுள்ளான் மதன் கொலை சம்பவத்தில் புதிய தகவல் கிடைத்துள்ளது. சுள்ளான் மதன் கொலை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ப ரீல்ஸ் ஒன்று பரவியது. கொலைக்கு பழி தீர்ப்பது போல அந்த ரீல்ஸ் அமைந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணையை தொடங்கின. இந்த நிலையில் வீடியோ பதிவிட்ட இளைஞர் விளக்கம் கொடுத்திருக்கிறார். அகிலன் என்ற ஐடியில் இருந்து ரீல்ஸ் போட வேண்டும் என்று கூறியதாகவும் அதற்கு 400 ரூபாய் பேரம் பேசியதாகவும் தெரிவித்திருக்கிறார். வீடியோ பதிவிட்ட இளைஞர் தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கும் நிலையில் இது தொடர்பாக போடப்படும் பதிவுகள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: "ஒரே குத்து தான்..! பேரணியில் நெருக்கிய நபர்.. கும்மாங்குத்து வைத்த ராகுல் காந்தி... வைரலாகும் வீடியோ..!!