சிவகாசியிலிருந்து திருவில்லிபுத்தூர் செல்லும் சாலையி லுள்ள தனியார் கல்லூரியின் 50-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற புதுடெல்லிஇந்தியப் புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் முனைவர் ரவிச்சந்திரன் மாணவ- மாணவியருக்குப் பட்டங்களை வழங்கி பாராட்டிப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளைக்காட்டிலும் இந்த ஆண்டு கோடை காலத்தின் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும். வெப்ப அலை குறிப்பிட்ட நாட்களில் வீசும். எப்பொழுது வெப்ப அலை வீசும் என்பதைச் சொல்ல முடியாது. கோடை காலத்தில் மழை பெய்யும்போது மின்னல் தாக்கி உயிரிழப்புகள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க கருமேகங்கள் கூடும்போதே மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும்.
மௌசம் (MAUSAM APP)செயலியில், தங்கள் இருக்கும் இடத்தில் மின்னல் தாக்கம் ஏற்படும் என்றால் அதனை முன்கூட்டியே அலாரம் எச்சரிக்கும் வசதியும், 10- நாட்களுக்கு முக்கிய வானிலை குறித்த முக்கிய தகவல்களை அறிய முடியும் என்பதால் இந்த செயலியை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: அதிமுகவை வம்புக்கு இழுத்தால் விஜய் வாங்கிக் கட்டிக் கொள்வார்... ஜெயக்குமார் எச்சரிக்கை..!
கடந்த காலத்திலும் தற்போதும் மழையின் அளவு ஒரே மாதிரியாகவே உள்ளது. முன்பெல்லாம் மழை பரவலாக பெய்தது. ஆனால் தற்போது ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் மொத்தமாக மழை பொழிவதால் அதிகளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.
அதற்கேற்ப எப்படி விவசாயம் செய்வது- எப்படி தண்ணீரை சேமிப்பது என்பது குறித்தும், விவசாயம் செய்யும் முறையை மாற்ற வேண்டும். தமிழகத்தில் கடைசி 3- ஆண்டுகளாக நல்ல மழை பெய்துள்ளது.வரும் காலங்களில் அதைவிட அதிக அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. என்றார்.
இதையும் படிங்க: சட்டம் அனைவருக்கும் சமம்! போக்குவரத்து விதியை மீறிய தோனிக்கு அபராதம் விதித்த ராஞ்சி போலீசார்!