2017ம் ஆண்டு சென்னை போரூரை சேர்ந்த 6 வயது சிறுமி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிர்ச்சி திருப்பம் நிகழ்ந்துள்ளது. 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக போரூர் மதனந்தபுரத்தை சேர்ந்த தஷ்வந்த் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். பிறகு தஷ்வந்த் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் பெற்ற தாயை கொலை செய்ததாக மும்பையில் மீண்டும் கைது செய்யப்பட்டார். பின்னர் சிறுமி கொலை வழக்கில் 2018ம் ஆண்டு பிப்ரவரியில் தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்தது செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். தொடர்ந்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. கருணை அடிப்படையில் தண்டனையை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தை தஷ்வந்த் நாடிய நிலையில், தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதுடன், விடுதலை செய்யப்பட்டு உள்ளார். விசாரணை முடிவடைந்து நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வில் தஷ்வந்தை விடுவித்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக தஷ்வந்துக்கு எதிராக முறையான ஆதாரம் இல்லை என்றும் ஆதாரமாக சமர்பிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளில் இருப்பது தஷ்வந்த் தான் என்பதை முறையாக உறுதிப்படுத்தவில்லை எனவும் குற்றம் நடைபெற்ற இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட DNA மாதிரிகளும் குற்றச் சம்பவத்துடன் ஒத்துப்போகவில்லை எனவும் நீதிபதி தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஷாக்...! தஷ்வந்திற்கு தூக்கு தண்டனை ரத்து... சிறுமி கொலை வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு!
மேலும், போதிய ஆதாரங்களுடன் சந்தேகத்திற்கு இடமில்லாமல் தஷ்வந்த் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்காததால், மரண தண்டனை வழங்கிய நீதிமன்ற தீர்ப்பு ரத்து செய்யப்படுவதாகவும், மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதால் உடனடியாக தஷ்வந்தை விடுதலை செய்ய வேண்டும் என்றும் நீதிபதி கூறியுள்ளார். தஷ்வந்த் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதுடன் விடுதலை செய்ய உத்தரவிட்டு இருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதுடன் தவறான உதாரணமாக மாறிவிட்டதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: #BREAKING: சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு ரத்து… SORRY சொன்னதால் சமரசம்…!