விமான பயணத்தின் போது எந்தெந்த பொருட்களை எடுத்துச் செல்லலாம், எடுத்துச் செல்லக்கூடாது என்பது குறித்து பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் விமான பயணத்தின் போது பயணிகளுக்கு கொடுக்கப்படும் சில பொருட்களை நீங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அது என்னென்ன பொருட்கள் என பார்க்கலாம் வாங்க.
உள்நாட்டு விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஹெட்ஃபோன்கள் அல்லது இயர்பட்கள் வழங்கப்படுகின்றன. பயணத்திற்குப் பிறகும் இவற்றை பயணிகள் தங்களுடன் எடுத்துச் செல்லலாம். விமான பணிப்பெண்கள் அதற்கு ஆட்சேபனை தெரிவிக்க மாட்டார்கள். ஆனால் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் போது வழங்கப்படும் இன்பில்ட் (Inbuilt) ஹெட்போன்களை எடுத்துச் செல்ல முடியாது.
சர்வதேச விமானங்களில் பயணிக்கும்போது, சில விமான நிறுவனங்கள் நேர்த்தியான போர்வைகள் மற்றும் தலையணைகளை வழங்குகின்றன. இது உங்களுடைய டிக்கெட் பேக்கேஜிக்குள் வரும் பட்சத்தில், நீங்கள் அதனை தாராளமாக எடுத்துச் செல்லலாம்.
இதையும் படிங்க: துரைமுருகனை சுற்றி வளைத்த பெண்கள்... அசராமல் டீல் செய்து அனுப்பி வைத்த அமைச்சர்...!
நீண்ட தூர விமானங்களில் இரவு முழுவதும் பயணிக்கும் பயணிகளுக்கு விமான நிறுவனங்களால் ஐ மாஸ்க், சாக்ஸ் மற்றும் பிரஸிங் கிட்களை வழங்குகிறார்கள். இவை ஒருமுறை மட்டுமே பயன்படுத்திவிட்டு தூக்கி வீசக்கூடியவை என்பதால், இவற்றையும் பெரும்பாலான பயணிகள் தங்களுடன் எடுத்துச் செல்லலாம்.
விமானப் பயணத்தின் போது, பிஸ்கட், சாக்லேட்டுகள், உலர் பழங்கள் போன்ற சிற்றுண்டிகள் பரிமாறப்படுகின்றன. இவற்றை சாப்பிடாமல் ஒதுக்கி வைத்தால், விமானப் பயணம் முடிந்த பிறகும் எந்தத் தொந்தரவும் இல்லாமல் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். இவையும் டிக்கெட் விலையில் சேர்க்கப்பட்டுள்ளன, எனவே யாரும் உங்களைத் தடுக்க மாட்டார்கள். அதேபோல் உங்களுக்கு படிக்க வழங்கப்படும் மேகசின்கள், பத்திரிகைகளையும் நீங்கள் எடுத்துச்செல்லலாம். ஆனால் பாதுகாப்பிற்காக வழங்கப்படும் உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு மெனுவல் ஆகியவற்றை கட்டாயம் நீங்கள் உங்கள் இருக்கையில் வைத்துவிட்டு தான் விமானத்தை விட்டு கீழே இறக்க முடியும்.
இதையும் படிங்க: எங்க உயிர் அவ்வளவு மட்டமா போச்சா? - பிரச்சார கூட்டத்தில் எடப்பாடி செய்த செயலால் ஷாக்கான மக்கள்...!