ஜம்மு காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே உள்ள கேரி செக்டர் பகுதியில், கடந்த 48 மணி நேரத்திற்குள் இரண்டாவது முறையாகச் சந்தேகத்திற்கிடமான ட்ரோன்கள் பறந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவும் ட்ரோன்கள் மூலம் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்காகப் பாதுகாப்புப் படையினர் ஏற்கனவே ‘ஹை-அலர்ட்’ நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில், அடுத்தடுத்து ட்ரோன்கள் தென்பட்டு வருவது பாதுகாப்பு அமைச்சகத்தின் கவனத்தைத் திசை திருப்பும் ஒரு தந்திரமா என்ற கோணத்தில் ராணுவப் புலனாய்வுத் துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் எல்லையோரப் பகுதியில் இன்று அதிகாலை பாதுகாப்புப் படையினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, வானில் மர்மமான முறையில் விளக்குகள் மின்னியவாறு ட்ரோன் ஒன்று கேரி செக்டர் பகுதியில் ஊடுருவியதைக் கண்டறிந்தனர். உடனடியாக உஷாரான வீரர்கள், அந்த மர்ம ட்ரோனை நோக்கித் தாக்குதல் நடத்த முற்பட்டனர். கடந்த 48 மணி நேரத்திற்குள் அதே பகுதியில் இது இரண்டாவது ஊடுருவல் என்பதால், எல்லையோரக் கிராமங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ட்ரோன்கள் மூலம் ஏதேனும் மர்மப் பார்சல்கள் வீசப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அப்பகுதி முழுவதும் பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து விடிய விடியத் தேடுதல் வேட்டையை முன்னெடுத்தனர். அத்துமீறி நுழையும் ட்ரோன்களைக் கண்டறிந்து அழிக்க நவீன ஜாமர் (Jammer) கருவிகள் மற்றும் ‘ட்ரோன் எதிர்ப்பு’ தொழில்நுட்பங்கள் தற்போது எல்லையில் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: விளைவுகள் பேரழிவைத் தரும்! அமெரிக்காவை எச்சரிக்கும் கத்தார்; அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!
இதையும் படிங்க: கையெழுத்து போடு; நிதியைத் தருகிறோம்! மத்திய அரசு பிளாக்மெயில் செய்வதாக அமைச்சர் அன்பில் மகேஷ் ஆவேசம்!