ஆன்-லைனில் உணவு ஆர்டர் எடுத்து வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்யும் நிறுவனமான ஸ்விகி 2024-25 மார்ச் மாதத்துடன் முடிந்த கடைசி காலாண்டில் நிறுவனத்தின் நிகர இழப்பு 95% அதிகரித்து ரூ.1,081 கோடியாக உயர்ந்துள்ளது.
இதற்கு முந்தைய நிதியாண்டின் கடைசிக் காலாண்டில் ஸ்விகியின் நிகர இழப்பு ரூ.554 கோடியாக இருந்த நிலையில் 95% அதிகரித்துள்ளது. ஸ்விகியின் ஆண்டுக்கு ஆண்டு இழப்பு 35% அதிகரித்து, ரூ.2,360 கோடியிலிருந்து ரூ.3,116 கோடியாக உயர்ந்துள்ளது.

விரைவான வருவாய், வர்த்தகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அதிகமான முதலீடு செய்ததும், மேலும் வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடன் தவணை செலுத்துதல் ஆகியவற்றுக்கு முந்தைய வருவாயை கணக்கில் கொள்ளாமல் இருந்ததால் இழப்பு ரூ.712 கோடியாக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: அஸ்திரத்தை அழிக்கும் இந்தியா! பாகிஸ்தான் MAP-லயே இருக்காது... அண்ணாமலை எச்சரிக்கை
ஸ்விகி நிறுவனத்துக்கு ஒருபுறம் இழப்பு இருந்தபோதிலும், மற்றொருபுறம் வருவாய் அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டின் கடைசிக் காலாண்டில் ஸ்விகி நிறுனத்தின் வருவாய் ரூ.5,609 கோடியாக உயர்ந்துள்ளது, இது அதற்கு முந்தைய நிதியாண்டில் ரூ.3,668 கோடியாகவே வருவாய் இருந்தது.

ஸ்விகி மேலான் இயக்குநர் ஸ்ரீஹர்ஷா மஜேட்டி கூறுகையில் “ 2025 நிதியாண்டில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளோம்.புதிதாக இன்ஸ்டாமார்ட், ஸ்நாக், பிங் ஆகிய செயலிகளை அறிமுகம் செய்துள்ளோம். இரண்டு ஆண்டுகளுக்குள் எங்களின் நுகர்வு வணிகத்தில் உணவு விநியோகம் நல்ல வளர்ச்சி இருக்கும்.
ஸ்விகி நிறுவனம் விரைவான விரிவாக்கம் செய்ததால் நிதி நெருக்கடி ஏற்பட்டபோதிலும்கூட வளர்ச்சி, நுகர்வோர் வசதிகள் மீதுதான் கவனம் செலுத்துகிறது. விரைவான வர்த்தகம் மற்றும் புதிய சந்தைப் பிரிவுகளில் நிறுவனத்தின் தீவிரமான பணியாற்றுகிறோம். இழப்புகள் இருந்தாலும், பல்வேறு பயனர்தளங்களைக் கைப்பற்ற உத்தியை வகுத்து செயல்படுகிறோம் ” என நம்பிக்கை தெரிவித்தார்.

ஸ்விகி நிறுவன்தின் மொத்த ஆர்டர் மதிப்பு 17.6% உயர்ந்து ரூ.7,347 கோடியாகவும், இஸ்டாமார்ட் ஆர்டர் 101% அதிகரித்து ரூ.4670 கோடியாகவும் இருக்கிறது, இதன் சராசரி மதிப்பு உயர்வு 13.3% உயர்ந்து, ரூ.527 கோடியாக இருக்கிறது. இது தவிர 316 டார்க்ஸ்டோர்ஸையும் கடந்த நிதியாண்டின் கடைசிக் காலாண்டில் 4 லட்சம் சதுரபரப்பில் திறந்துள்ளது. இதன் மூலம் பயனாளிகள் 18 % உயர்ந்து 1.98கோடியாக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: உலக அரங்கில் அசிங்கப்பட்ட பாக்., பீதியிலும் இந்தியாவை மிரட்ட ஷாபாஸின் அடுத்த தந்திரம்..!