மத்திய கல்வித்துறை அமைச்சகத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசாங்கம் சார்பில் தற்பொழுது உச்சநீதிமன்றத்தில் மணுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பிஎம் ஸ்ரீ திட்டம் சமக்ர சிக்ஷா அபியான் திடத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அந்த கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது சட்ட விரோதம் என்ற ஒரு கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேசிய புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தாததன் காரணமாக மாணவர்களுடைய நலனுக்காக வழங்கப்பட வேண்டிய நிதியை நிறுத்தி வைப்பது என்பது சட்ட விரோதம் என்றும், இது போன்று மாணவர்களுக்கு எதிரான போக்கை மத்திய அரசு கடைபிடித்து வருகிறது என்றும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ள மத்திய அரசு, உடனடியாக தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய 2,291 கோடி ரூபாயை 6 சதவீத வட்டியுடன் விடுவிப்பதற்கான உத்தரவை மத்திய அரசிற்கு பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆசியாவில் மீண்டும் மிரட்டத் தொடங்கும் கொரோனா.. இந்தியாவில் இவ்வளவு பேருக்கு கொரோனா தொற்றா?

தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் முதலேற்பு வழக்கு தொடர்ந்துள்ளது. இரு மாநிலங்களுக்குிடையே அடிப்படை உரிமைகள் பறிபோகும் போதும் அல்லது மத்திய அரசு மத்திய அரசால் மாநிலங்களின் உரிமைகள் பறிபோகும் போதும் தாக்கல் செய்ய வேண்டிய அந்த சட்ட அரசமைப்பு அடிப்படையிலேயே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திமுக கூட்டணியில் பாமகவுக்கு இடம் உண்டா.? திமுக கூட்டணி கட்சி சொன்ன நச் பதில்!!