ஈரான் இஸ்ரேல் போர் காரணமாக நாடு முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், தலைமை செயலாளர் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் அவசர ஆலோசனை நடைபெற்றது. அதில் தமிழகத்தில் கையிருப்பில் உள்ள சமையல் எரிவாய் சிலிண்டர்கள் மற்றும் வணிக சிலிண்டர்களின் விவரங்களை தமிழக அரசு கேட்டிருக்கிறது.
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரின் காரணமாக எரிவாயு சிலிண்டர்கள் விநியோகத்தில் தட்டுபாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அமெரிக்காவிற்கு ராணுவ தளங்கள் அமைக்க இடம் கொடுத்த துபாய், சவுதி, கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகள் மீது ஈரான் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இதனால் சர்வதேச சந்தைகளில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்தியாவின் எல்பிஜி தேவையில் சுமார் 60 விழுக்காடு சவுதி அரேபியா மற்றும் கத்தார் போன்ற நாடுகளிலிருந்து செய்யப்படுகிறது. இச்சூழலில் மேற்காசிய போரால் அந்நாடுகளில் பதற்றம் நிலவி வருவதாலும் ஹார்மூஸ் நீரணை பாதை முடங்கி உள்ளதாலும் இந்தியாவின் எல்பிஜி விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலியால் பெங்களூருவில் உள்ள உணவகங்கள் இன்று முதல் மூடப்படும் என்று பெங்களூரு உணவகங்கள் சங்கம் அறிவித்துள்ளது. இத்தகைய சூழலில் பெங்களூருவில் உள்ள 3000-க்கு மேற்பட்ட உணவகங்கள் இன்று முதல் இயங்காது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் உணவகங்களை மட்டுமே நம்பி இருக்கும் மாணவர்கள் முதியோர் நோயாளிகள் தினக்கூழி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காலையில் இடியாய் இறங்கிய செய்தி... இவங்களுக்கு கேஸ் சிலிண்டர் கிடையாது... தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள்...!
சென்னை மணலியில் உள்ள ஐ.ஓ.சி. (IOC) சிலிண்டர் நிரப்பும் நிலையத்தில் 19 கிலோ வணிகப் பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டு, வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகம் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது இதனிடையே, தமிழகத்தில் கையிருப்பில் உள்ள சமையல் எரிவாய் சிலிண்டர்கள் மற்றும் வணிக சிலிண்டர்களுடைய விவரத்தை தலைமை செயலாளர் கேட்டுள்ளார். இன்று அனைத்து தகவல்களையும் தர வேண்டும் என எண்ணை நிறுவனங்களுக்கு தற்போது தலைமை செயலாளர் உத்தரவிட்டுருக்கிறார்.
அதன் அடிப்படையில் அடுத்த கட்டமாக தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டிய முடிவுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ஆராயப்படவுள்ளன. குறிப்பாக ஒருவேளை சமையல் எரிவாய்வுகள் கிடைக்கவில்லை என்றால் அடுத்த கட்ட முயற்சி என்ன என்பது குறித்தும் தற்போது ஆலோசனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் ஒரு நாள் பயன்படுத்தக்கூடிய சிலிண்டர் மற்றும் வணிக சிலிண்டர் என அனைத்து சிலிண்டர்களுடைய எண்ணிக்கையும் தற்போது தலைமை செயலாளர் கேட்டிருக்கிறார். தமிழகத்தில் கையிருப்பில் உள்ள சிலிண்டர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்ற தகவலும் கேட்கப்பட்டுள்ளது. மேலும் சிலிண்டர் எவ்வளவு தட்டுப்பாடு இருக்கிறது என்பது குறித்தும் கேட்டறிந்து வருகிறார். எனவே இன்றுக்குள் அவர்கள் தங்களுடைய முழுமையான அறிக்கையை தலைமை செயலரிடம் ஒப்படைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு... மத்திய அரசு புதிய கட்டுப்பாடு... வெளியானது அறிவிப்பு...!