பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாள் தமிழ் வார விழாவாக ஏப்ரல் 29ஆம் தேதி முதல் மே ஐந்தாம் தேதி வரை கொண்டாடப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். கவியரங்கங்கள் மற்றும் இலக்கிய கருத்தரங்குகள், பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது, தமிழ் இலக்கியம் போற்றுவோம், பள்ளிகளில் தமிழ் நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் அறிவித்திருந்தார்.

அதன்படி 21ஆம் தேதி முதல் தமிழ் வார விழா கோலாக்கலமாக கொண்டாடப்பட்டு வந்தது. இந்த நிலையில் பாரதிதாசனை பிறந்தநாள் தமிழ் வார விழா நிறைவு நிகழ்ச்சி முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நாளை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. தமிழ் வார விழாவின் நிறைவு விழா நாளை காலை 10.30 மணிக்கு அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு ஆகியோர் முன்னிலையில் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் 135வது பிறந்தநாள்..! முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை..!

இவ்விழாவில் தமிழ் வளர்ச்சித்துறையின் வாயிலாக 5 சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை நாட்டுடைமையாக்கியதன் விளைவாக அவர்களின் குடும்பத்தினருக்குப் பரிவுத்தொகை வழங்கப்பட உள்ளது. மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பரிசுகள் வழங்கி பேருரை ஆற்ற உள்ளார்.

இவ்விழாவில் பாவேந்தரின் எழுச்சி பாடல்கள், தமிழ் அமுது நாட்டிய நிகழ்ச்சி, சங்கே முழங்கு மாபெரும் நடன நிகழ்ச்சி, மற்றும் பாவேந்தர் பாரதிதாசன் பாடல்களில் விஞ்சி நிற்பது மொழி உணர்வா? சமூக உணர்வா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் உள்ளிட்டவை நடைபெற உள்ளன.
இதையும் படிங்க: அதிமுக - பாஜக தான் வெற்றி கூட்டணி! திமுக பச்சோந்தி..லிஸ்ட் போட்ட இபிஎஸ்...