மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்ற பின்னர், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தனது முதல் உரையை நேற்று முன்தினம் மாநிலங்களவையில் ஆற்றினார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்தின் போது நிகழ்த்தப்பட்ட இந்த உரை, தமிழ் மொழி, தமிழ் அடையாளம், வாக்குரிமை பாதுகாப்பு மற்றும் சில மத்திய அரசு நடவடிக்கைகள் குறித்த கடுமையான விமர்சனங்களுடன் அமைந்திருந்தது.
உரையைத் தொடங்கிய கமல்ஹாசன், தான் சினிமா உலகத்திலிருந்து வந்தவன் என்றும், தமிழ்நாட்டின் பரமக்குடி என்ற சிறிய ஊரிலிருந்து பயணித்து இந்த அவைக்கு வந்திருப்பதாகவும் குறிப்பிட்டார். அண்ணாவின் வழிகாட்டுதலால் தான் தமிழ் மொழியைப் புரிந்து கொண்டதாகவும், மகாத்மா காந்தி கோபமின்றி பேசுவதற்கும், பெரியார் தர்க்கத்துடன் சிந்திப்பதற்கும் உதவியதாகவும் குறிப்பிட்டார். தான் பொருளாதாரத்தில் பட்டதாரி இல்லை என்றாலும், ஒரு தமிழனாக தனக்கு கருத்து இருப்பதாகவும் வலியுறுத்தினார்.

உரையில் தமிழ் மொழி குறித்து மிக முக்கியமான பகுதி வந்தது. கடந்த ஆண்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய ஒரு கருத்தை மேற்கோள் காட்டி, தமிழ் மொழியை இழிவுபடுத்தும் வகையில் பேசப்பட்டதாகக் குற்றம்சாட்டினார். கமல்ஹாசன் பேச்சு குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் பேசுவதை புரிந்து கொள்ள கோனார் தமிழ் உரை தேவைப்படும் என்றும் அவர் பேசியது ஒன்றுமே புரியவில்லை, ஒன்றும் கேட்கவில்லை என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: செங்கல் சூளையில் வட மாநில பெண் வன்கொடுமை..! திமுகவுக்கு சமாதி கட்டுற நேரம் வந்துருச்சு..! கொந்தளித்த நயினார்
பெரியார் கூறியதை நிர்மலா சீதாராமன் கூறியதாக கமல்ஹாசன் பதிலடி கொடுத்திருப்பதாகவும், அவருடைய பேச்சு பெரியாருக்கு தான் பதிலடி என்றும் தெரிவித்தார். இது தெரியாமல் பெரியார் பக்தர்கள் கைதட்டி கொண்டு இருப்பதாக கூறினார். திமுக சில மன்னிக்க முடியாத தவறுகள் செய்யும் என்றும் அதில் ஒன்றுதான் கமல்ஹாசனை மாநிலங்கள் அவைக்கு அனுப்பியது எனவும் கிண்டலடித்தார். யாரும் நீண்ட நாள் ஆட்சியில் இருக்க முடியாது என்று கமல் கூறியதாகவும், இப்போது 2026 சட்டமன்றத் தேர்தல்தான் வருகிறது என்றும் தமிழ் பேசியது ஸ்டாலினுக்கே அதிர்ச்சியாக இருந்திருக்கும் எனவும் விமர்சித்தார்.
இதையும் படிங்க: SAFETY FIRST..! பரவி வரும் பறவை காய்ச்சல்..! மக்கள் உஷாராக இருக்க நயினார் அறிவுறுத்தல்..!