வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள அத்தி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக முன்னாள் தலைவர் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளரிடம் பேசினார் அப்போது பேசிய அவர் திமுக தேமுதிக கூட்டணி குறித்த கேள்விக்கு, என்னை பொறுத்தவரை இது மூழ்கிற கப்பலில் அவர்கள் சென்றிருக்கிறார்கள்கேப்டனின் தொண்டர்களை அதில் அமர வைத்திருக்கிறார்கள் இது எனக்கு வேதனை.
விஜயகாந்த் அவர்கள் எந்த அளவிற்கு அரசியலில் நேர்மை நாணயம் பெண்களுக்கு பாதுகாப்பு தன் ரசிகர்களுக்கு மக்களுக்கு பாதுகாப்பாக இருந்த அவர் அவருடைய கட்சி இந்த முடிவை எடுத்திருப்பது வருந்தத்தக்கது. தொண்டர்களின் விருப்பமாக சொல்கிறார் தொண்டர்கள் அப்படி விரும்பினார்களா என தெரியாது.
கேப்டன் கேப்டன் என தலை நிமிர்ந்து சொல்லிக் கொண்டிருந்த கேப்டனின் கட்சி மூழ்கிற கப்பலில் கேப்டன் ஆக போனால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இந்த சூழல் உள்ளது. இதை பெரிய சவாலாக முதல்வர் சொல்லிக் கொண்டிருக்கிறார். பிரேமலதா அவர்களுக்கு எனது அனுதாபங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி மிக மிக வலிமையாக உள்ளது நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம்,
இதையும் படிங்க: தேமுதிகவுடன் கூட்டணியா? மார்ச் 1ல் மோடி வருவார்! அதுவரை பொறுங்க! நயினார் நாகேந்திரன் சூசகம்!
கிராமங்களுக்கு அதிகார தீர்வு கொடுக்காமல் மாநிலத்தைப் பற்றி பேசுகிறார்கள் காங்கிரஸ் கூடயிருந்து கொண்டு திமுக அதை பற்றி பேசுகிறது. மனித உரிமை ஜனநாயக உரிமை கறுத்தை நிறுத்தவர்கள் இதை பேசுவது வருத்தம்.மாநில கட்சிகளே இருக்கக்கூடது என்பவர்களோடு இப்போது கூட்டணியில் உள்ளார்கள். பெண்களுக்கு எது கொடுத்தாலும் எனக்கு மகிழ்ச்சி தான் ஆனால் 28 மாதங்கள் கொடுக்காமல் இப்போது கொடுக்கிறார்கள் என்றால் ஓட்டுக்காக தான்.
பாதுகாப்பா இருக்கணும் எந்த உயிரும் போகக்கூடாது தமிழக வெற்றி கழக சகோதரர்களுடன் நான் கேட்டுக்கொள்கிறேன். கூட்டத்தில் தண்ணி உள்ளதா தன்னார்வலர்கள் உள்ளார்களா முறையான கூட்டம் ஒருங்கிணைக்கப்படுகிறது என்பதை நாங்கள் பார்ப்போம் அது போன்று விஜய் கட்சியும் பார்க்க வேண்டும்.
ஆனால் அந்த வசதிகள் அங்கு உள்ளதா என பார்க்க முடியவில்லை. எந்த அபாயமும் இல்லாமல் கூட்டத்தை நடத்த வேண்டும். விஜய் வேலூருக்கு வரட்டும் வெளியூருக்கு போகட்டும் ஆனால் எந்த உயிரும் பாதிக்க கூடாது என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எட்டு பேருக்கு தொகுதி ஒதுக்கணும்!! எந்த கூட்டணி போகலாம்?! திமுக, அதிமுக பேரம்! புதிய நெருக்கடியில் பிரேமலதா!