தமிழ்நாடு ›

பூதாகரமாக வெடிக்கும் ரூ.10 ஆயிரம் பரிசு கூப்பன்..! களேபரமான ஜெயக்குமார் தொகுதி..!!

பத்தாயிரம் ரூபாய் காண மாதிரி காசோலை விவகாரம் பூதாகரமாக மாறிய நிலையில் ஜெயக்குமார் தொகுதியிலும் விநியோகிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு, வீடு வீடாக வாக்கு சேகரிப்பு, தெரு முனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என பல்வேறு வடிவங்களில் அரசியல் கட்சிகள் சார்பில்பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. பல தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து வாக்காளர்களை நேரடியாக சந்தித்து, “ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள், தலைமுறைக்கும் மாற்றம் வரும்” என்ற முழக்கத்துடன் மக்களிடம் சென்று கொண்டிருக்கின்றனர். 

பரிசுப் பொருட்கள் பணம் உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் சில இடங்களில் பரிசு டோக்கன்கள், கூப்பன்கள், பண பட்டுவாடா ஆகியவை நிகழ்கின்றன. தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இத்தகைய சம்பவங்கள் தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பை இறுக்கமாக்கின.

பணப் பரிவர்த்தனை, லஞ்சம், இலவசங்கள் வழங்குதல் போன்றவற்றைத் தடுக்க பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் தீவிரமாகச் செயல்பட்டன. கடலூர் மாவட்டத்தில் மட்டுமின்றி, மாநிலத்தின் பல பகுதிகளிலும் இதுபோன்ற சந்தேகத்துக்குரிய பணப் பரிவர்த்தனைகள், கூப்பன்கள், டோக்கன்கள் தொடர்பான புகார்கள் எழுந்தன. 

இதையும் படிங்க: அதிமுகவின் 10 ஆயிரம் ரூபாய் கூப்பன்..! கையும் களவுமாக பிடித்த திமுக நிர்வாகிகள்..!

அதிமுக தரப்பில் பத்தாயிரம் ரூபாய்க்கான மாதிரி காசோலைகள் வழங்கப்படுவதாக இருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பல்வேறு இடங்களில் கையும் களவுமாக அதிமுகவினர் கூப்பன் கொடுக்கும் பொழுது திமுகவினர் பிடித்து தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்து வருகின்றனர். இந்த நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிடும் ராயபுரம் தொகுதியில் பத்தாயிரம் ரூபாய் மாதிரி காசோலை கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அதிமுகவினர் கூப்பன் கள் கொடுக்கும் பொழுது அங்கு சென்ற திமுகவினர் அவர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி இருக்கிறது. 

இதையும் படிங்க: குடும்பத் தலைவிகளுக்கு ரூ.10,000".. இரட்டை இலை சின்னத்துடன் சிக்கிய மாதிரி காசோலைகள்.!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள் ›

தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी