'சரக்கு' பற்றி எழுந்த கேள்வி..!! சட்டென எடப்பாடி சொன்ன 'நச்' பதில்..!! என்னவா இருக்கும்..??
ஆட்சி தொடக்கத்திலேயே இத்தகைய அளவிலான போராட்டங்களை எந்த அரசும் சந்தித்ததில்லை என்றார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து தமிழக அரசின் பல்வேறு கொள்கைகள் மற்றும் நிர்வாகத் தோல்விகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். காவிரி நீர் பிரச்சினை தொடர்பான தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுவிட்டு திரும்பிய அவர், பத்திரிகையாளர் சந்திப்பில் முக்கிய அரசியல் விவகாரங்கள் குறித்து விளக்கமளித்தார்.
11 வகையான மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, எடப்பாடி பழனிசாமி தெளிவாகப் பதிலளித்தார். “மதுபானம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நான் மது அருந்தும் பழக்கம் உள்ளவர் அல்ல. எந்த பிராண்டு என்றே எனக்குத் தெரியாது. தெரிந்தால் பேசுவேன்” என்று கூறினார். அவர் காவிரி விவகார ஆர்ப்பாட்டத்திலிருந்துதான் இப்போது வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
கோவை கல்லூரி மாணவர் கொலை சம்பவம் குறித்து கேட்டபோது, அவர் மாணவர்களின் மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார். சிலர் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருவதாகவும், சட்டமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதாகவும், அமைச்சர்கள் திங்கட்கிழமை முழு விளக்கம் அளிப்பதாக உறுதியளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். உரிய விசாரணைக்குப் பிறகுதான் உண்மை நிலை தெரியும் என்றும், மற்ற மாணவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என்றும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: “தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடுவது தமிழன்னைக்கு மரியாதை” ..! விஜய் தீர்மானத்தை ஆதரித்த இபிஎஸ்..!!
கடந்த ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது போதைப்பொருள் விற்பனை தற்போது அதிகரித்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற 100 நாட்களில் ரீல்ஸ் போட்டு சாதனை என்று காட்டியதே அவர்களின் பங்களிப்பு என்று கிண்டலடித்தார். அரிசி விலை உயர்வு, விவசாயிகள் போராட்டங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டிய அவர், ஆட்சி தொடக்கத்திலேயே இத்தகைய அளவிலான போராட்டங்களை எந்த அரசும் சந்தித்ததில்லை என்றார்.
சிறு-குறு விவசாயிகளுக்கு ரூ.75 ஆயிரம், அதற்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.35 ஆயிரம் கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பை ஏற்க முடியாது என்று கூறிய எடப்பாடி, விவசாயிகள் வருமானமின்றி தவிப்பதாகவும், மேகதாது அணை கட்டுமானத்தைத் தடுக்க உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
காவிரி நீர் திறப்பு விவகாரத்தில் கர்நாடக அரசு உபரி நீரையே திறக்கிறது என்றும், ஜூன்-ஜூலை மாதங்களில் நீர் வராமல் ஆகஸ்டில் தான் சிறிது வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். திமுக அரசு மக்கள் கோரிக்கைகளைக் கேட்காமல் செயல்படாத மவுன முதல்வராக விஜய் இருப்பதாக அவர் விமர்சித்தார்.
இதையும் படிங்க: காரில் குழப்பம்.. களத்தில் பரபரப்பு! உதயநிதியின் காரை நோக்கிச் சென்ற இபிஎஸ்!