நெல்லை கோயிலில் தீண்டாமை இல்லை! சபாநாயகர் அப்பாவு நேரடி விளக்கம்!
குழந்தைகள் தடுத்து நிறுத்தப்பட்டதாகக் கூறுவது மனிதத்தன்மைக்கு புறம்பானது என்று அதிமுகவின் குற்றச்சாட்டுகளுக்குப் பேரவைத் தலைவர் அப்பாவு இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
நெல்லை நெல்லையப்பர் திருக்கோயிலில் நடைபெற்றச் சமபந்தி விருந்தில் நரிக்குறவர் சமூகச் சிறுவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாகக் கிளம்பியப் புகார்களுக்குச் சட்டப்பேரவைத் தலைவர் எம். அப்பாவு அவர்கள் இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது போன்றச் செய்திகள் வெறும் வணிக நோக்கத்திற்காகத் திரிக்கப்பட்டவை என்றும், இதில் துளியும் உண்மையில்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் அப்பாவு பங்கேற்ற அன்னதான நிகழ்வில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டதாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் சமபந்தி விருந்தின் போது யாரையும் வரிசையில் நிற்கவோ அல்லது தடுப்புகளைக் கொண்டுத் தடுத்து நிறுத்தவோ இல்லை. அனைவரும் சமமாகவே நடத்தப்பட்டனர் என்று அவர் விளக்கமளித்தார். உண்மையிலேயேக் குழந்தைகள் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும். ஆனால், இந்தச் செய்தியில் எந்த உண்மையும் இல்லை. இது மனிதத்தன்மைக்கு முற்றிலும் புறம்பான ஒரு செய்தி எனச் சாடினார்.
இதையும் படிங்க: பசியோடு வந்த பிஞ்சு குழந்தைகள்! சமபந்தி போஜனத்தில் சாதி பார்த்த அவலம்.. கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்!
சில ஊடகங்கள் வணிக லாபத்திற்காக இத்தகையச் செய்திகளை வெளியிடுவதாகவும், அதற்குப் பதில் அளிக்க வேண்டியத் தேவை தமக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதிமுகவின் சமீபத்தியத் தேர்தல் வாக்குறுதிகள் குறித்துப் பேசிய சபாநாயகர், திமுக அரசின் தேர்தல் அறிக்கைகளைப் பார்த்து அப்படியேக் காப்பியடித்து அதிமுக தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவேச் சொல்லிவிட்டார். அதில் புதிதாகச் சொல்வதற்கு எதுவுமில்லை என்று விமர்சித்தார். நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்தக் கேள்விக்கு, காங்கிரஸ் - திமுக கூட்டணி மிகவும் பலமாக இருக்கிறது. எங்களைப் பிரிக்க நினைக்கும் உங்கள் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்று காரசாரமாகப் பதிலளித்துவிட்டு அவர் அங்கிருந்து புறப்பட்டார்.
இதையும் படிங்க: இன்று கூடுகிறது தமிழக சட்டமன்றம்! ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது ஆண்டின் முதல் கூட்டத்தொடர்!