×
 

வீரியமெடுத்த ஹார்ட் டிஸ்க் திருட்டு... சிபிசிஐடி வசம் சென்ற விவகாரம்..! கிடுக்கிப்பிடி விசாரணை..!

ஹார்ட் டிஸ்குகள் திருடப்பட்ட விவகாரம் சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை அண்ணாசாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்கள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்கள் மாயமானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில்தான் மாநிலம் முழுவதும் நடைபெறும் மின்சார வாரிய டெண்டர்கள், நிலக்கரி கொள்முதல், மின்சார உபகரணங்கள் வாங்குதல் உள்ளிட்ட முக்கிய நிர்வாக ஆவணங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், டெண்டர்கள் மற்றும் கொள்முதல் தொடர்பான முக்கிய தகவல்கள் சேமிக்கப்பட்டிருந்த 18 ஹார்ட் டிஸ்க்கள் காணாமல் போயிருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 16 மற்றும் 17 ஆம் தேதிகளில், அதாவது வார இறுதி நாட்களில் இந்த திருட்டு நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 18 கணினிகளில் இருந்த ஹார்ட் டிஸ்க்கள் காணாமல் போயிருப்பது தெரியவந்தது.

இதையும் படிங்க: ஹார்ட் டிஸ்க் மிஸ்ஸிங் விவகாரம்..!! செந்தில் பாலாஜி ஏன் பதறணும்..?? அமைச்சர் நிர்மல்குமார் கேள்வி..!!

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் சிபிஐ விசாரணை தேவை என்றும் பலர் வலியுறுத்தி வந்தனர். ஹார்ட் டிஸ்குகள் காணாமல் போனது குறித்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறி கோபிநாத் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 18 ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கோபிநாத்துக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஹார்ட் டிஸ்குகள் திருடப்பட்ட விவகாரம் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது விசாரணை சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. 

இதையும் படிங்க: மின்வாரிய ஹார்ட் டிஸ்க் திருட்டில் பரபரப்பு பின்னணி... கையும் களவுமாக சிக்கிய குற்றவாளி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share