×
 

சினிமா மயக்கம் எடுபடாது! தவெக விஜய் குறித்து திருமாவளவன் அதிரடி!

தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் ஏற்படுத்தப்போகும் தாக்கம் குறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் தனது முக்கிய கருத்தை பகிர்ந்துள்ளார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் சூழலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஏற்படுத்தப்போகும் தாக்கம் குறித்து அரசியல் வட்டாரத்தில் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. இது தொடர்பாகப் புதிய தலைமுறைக்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் அளித்துள்ள பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தமிழ்நாட்டு மக்கள் ஒப்பீட்டு அளவில் பிற மாநிலங்களைவிட அரசியல் விழிப்புணர்வு கொண்டவர்கள்; எனவே சினிமா மயக்கம் தமிழ்நாட்டைப் பாதிக்காது என நான் நம்புகிறேன்" எனத் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

தவெக தலைவர் விஜய் தேர்தலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், மக்கள் கொள்கை ரீதியான அரசியலையே விரும்புவார்கள் என்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார்.

இதையும் படிங்க: பெண்களிடம் மன்னிப்பு கேளுங்கள் நயினார் நாகேந்திரனுக்கு மருத்துவர் ராமதாசு கடும் கண்டனம்!

 2026 தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தனது தனித்துவமான கொள்கைகளுடன் களம் காணும் என்றும், சினிமாவில் இருந்து வரும் கவர்ச்சி அரசியலால் மக்களின் அடிப்படை அரசியல் புரிதல் மாறாது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தவெக-வின் வாக்குறுதிகள் மற்றும் அரசியல் நகர்வுகள் குறித்துப் பேசுகையில், "இதெல்லாம் தவெக-வின் கற்பனை" எனக் குறிப்பிட்டு, ஆளுங்கட்சியான திமுக-வின் திட்டங்களே மக்களிடம் செல்வாக்கு பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தமிழக அரசியலில் சினிமா நட்சத்திரங்களின் வருகை என்பது புதியதல்ல என்றாலும், தற்போதைய வாக்காளர்கள் விழிப்புணர்வுடன் இருப்பார்கள் என்ற திருமாவளவனின் இந்தக் கருத்து அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இதையும் படிங்க: “கட்சிக்கே ‘கால் சீட்’ கொடுக்கிற ஒரே தலைவர் விஜய் தான்” சிபிஎம் மதுக்கூர் ராமலிங்கம் விமர்சனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share