×
 

விஜய் முதல்வராக கூடாது என உதயநிதி டீல் பேசினார்! ரகசிய டீலை உடைத்த மாணிக்கம் தாகூர்!

விஜய் முதலமைச்சராகக் கூடாது என உதயநிதி அனைத்து முயற்சிகளையும் செய்து தோற்றுள்ளார்; அதிமுகவுடன் சேர டெல்லி கனெக்டிங் கால் போட்டது என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம் பெரும் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், விஜய் முதலமைச்சராகக் கூடாது என்பதற்காக அதிமுகவுக்கு வெளியிலிருந்து ஆதரவளிக்கத் திமுக தயாராக இருந்தது என்று விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் எம்பி திரு. மாணிக்கம் தாகூர் அதிரடிக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். டெல்லி பாஜக தலைமை இதற்கான 'கனெக்டிங் கால்' (Connecting Call) வேலைகளைச் செய்தது என்றும் அவர் அம்பலப்படுத்தியுள்ளார்.

திமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே ஒரு ரகசியப் பாலத்தை (Connecting Call) டெல்லி பாஜாக தலைமைதான் ஏற்படுத்திக் கொடுத்தது. திமுக தனது கொள்கைகள் அனைத்தையும் குப்பையில் போட்டுவிட்டு, அதிமுகவுடன் கைகோர்க்கத் தயாரானது. உதயநிதி ஸ்டாலினைப் பொறுத்தவரை, விஜய் எந்தச் சூழ்நிலையிலும் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துவிடக் கூடாது என்பதில் மிகத் தீவிரமாக இருந்தார். அதற்காக அவர் எடுத்த அனைத்து முயற்சிகளும் தற்போது தோற்றுப் போயுள்ளன.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவதற்குத் திமுக வெளியிலிருந்து ஆதரவு அளிக்கும் என்பதுதான் டெல்லி போட்டுக் கொடுத்த 'டீல்'. இதற்குத் தமிழக ஆளுநரின் மறைமுக உதவியும் இருக்கவிருந்தது. காரணம், விஜய் வருவதைத் தடுப்பது மட்டுமே இவர்களின் ஒற்றை நோக்கமாக இருந்தது என்று மாணிக்கம் தாகூர் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

இதையும் படிங்க: திமுக - காங்., மோதல் உச்சம்! அனிதா ராதாகிருஷ்ணனுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி!

அண்மையில் நடந்த திமுகவின் உட்கட்சிக் கூட்டத்தில், தங்களின் தேர்தல் தோல்விக்குக் காங்கிரஸ் கட்சிதான் காரணம் எனப் பேசப்பட்டதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக தேர்தல் தோல்வியைச் சந்தித்த உடனே, பழியை எங்கள் மீது போடுவது அவர்களின் வழக்கமான பேச்சுதான். திமுக கூட்டத்தில் காங்கிரஸ் பற்றிப் பேசியதன் மூலம் உதயநிதியின் வன்மம் முற்றிலும் வெளிப்பட்டுவிட்டது. 

திமுக தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும், கட்சி சிதறிவிடக் கூடாது என்பதற்காகவும் மட்டுமே தற்போதைய தவெக கூட்டணி அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது என்று மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். பாஜக தமிழகத்திற்குள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கால் பதித்துவிடக் கூடாது என்பதற்காகக் காங்கிரஸ் கட்சி எந்தவிதமான தியாகத்தையும் செய்ய எப்போதும் தயாராகவே இருக்கிறது.

புதிய முதலமைச்சர் விஜயின் நிர்வாகத் திறன் மற்றும் தற்போதைய தவெக அரசின் நிலைத்தன்மை குறித்துப் பெருமிதத்துடன் பேசிய மாணிக்கம் தாகூர், தமிழகத்திற்கு ஒரு நேர்மையான மற்றும் தூய்மையான ஆட்சிக் கட்டமைப்பைக் கொடுக்க வேண்டும் என்பதில் முதலமைச்சர் விஜய் மிகுந்த முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். எதிர்க்கட்சிகளின் ரகசியக் கூட்டணிகளையும், சதிகளையும் முறியடித்துத் தமிழகத்தில் தவெகவின் ஆட்சி வெற்றிகரமாகத் தொடரும் என்று உறுதியளித்தார்.

இதையும் படிங்க: திமுக சட்டமன்றக் குழுத் தலைவராக உதயநிதி தேர்வு! எதிர்க்கட்சித் தலைவராக செயல்படுவார் என அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share