×
 

தேமுதிக விருப்ப மனு விநியோகம் இன்று தொடக்கம்! 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு தீவிரம்!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் சென்னை கோயம்பேடு தலைமை அலுவலகத்தில் இன்று தொடங்குகிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) தனதுத் தேர்தல் பணிகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் கட்சியினர், இன்று முதல் விருப்ப மனுக்களைப் பெற்றுக்கொள்ளலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

தேமுதிக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள், இன்று (பிப்ரவரி 6) முதல் வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி வரை விருப்ப மனுக்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகமான 'கேப்டன் ஆலயம்' வளாகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மனுக்கள் விநியோகம் செய்யப்படும். பொதுத் தொகுதிகளுக்கு ஒரு குறிப்பிட்டத் தொகையும், தனித் தொகுதிகள் மற்றும் பெண்களுக்குச் சலுகை கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை உரியக் கட்டணத்துடன் தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

இதையும் படிங்க: “சென்னையில் பறவை காய்ச்சல்!” பொதுமக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை!

விருப்ப மனுக்கள் பெறப்பட்டப் பிறகு, விண்ணப்பதாரர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டு, கூட்டணிப் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் வேட்பாளர்கள் இறுதி செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது.

சமீபத்தில் தூத்துக்குடியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வரும் தேர்தலில் ஆட்சி அமைக்கும். கேப்டன் விஜயகாந்த் அவர்களின் கனவை நனவாக்கும் வகையில் 2026 தேர்தல் முடிவுகள் அமையும்" எனத் தன்னம்பிக்கையுடன் தெரிவித்திருந்தார். தற்போது அதிமுக கூட்டணியில் நீடிக்கும் தேமுதிக, கௌரவமானத் தொகுதிகளைப் பெறுவதில் உறுதியாக உள்ளது.

இதையும் படிங்க: ரூ.1.50 கோடி அபராதம் ரத்தாகுமா? வருமான வரித்துறை அபராத வழக்கில் நடிகர் விஜய்க்கு இன்று தீர்ப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share