இன்று முதல் வேலை நிறுத்தம்... தென் மாநிலங்கள் ஸ்தம்பிக்கும் அபாயம்... இனி கேஸ் சிலிண்டர்கள் கிடைக்காது...!
எல்.பி.ஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு ஐ.ஓ.சி ரூ.50 கோடி வாடகை பாக்கி. வாடகை பாக்கியை உடனடியாக வழங்காததால் இன்று காலை முதல் எல் பி.ஜி கேஸ் டேங்கர் லாரிகள் இயக்காமல் நிறுத்தம்.
தமிழ்நாடு, ஆந்திரா தெலுங்கானா, கர்நாடக ,புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கியது தென் மண்டல எல்.பி.ஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம். இந்த சங்கம் நாமக்கல் லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் சுமார் 4,500 கேஸ் டேங்கர் லாரிகள் உள்ளன. இவைகள் அனைத்தும் மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான ஐ.ஓ.சி, பி.பி.சி, எச்.பி.சி ஆகிய மூன்று ஆயில் நிறுவனங்களுக்கு சொந்தமான சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் எரிவாயுவை சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு 5 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது.
சுமார் 1,000 எல்.பி.ஜி கேஸ் டேங்கர் லாரிகள் ஐ.ஓ.சியில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த லாரி உரிமையாளர்களுக்கு கடந்த சில வருடங்களாக வாடகை பாக்கி வைத்துள்ளது. சுமார் 50 கோடி அளவுக்கு வாடகை பாக்கி வைத்துள்ளது. ஐ.ஓ.சி. நிலுவையில் உள்ள வாடகை தொகையை லாரி உரிமையாளர்களுக்கு திரும்ப வழங்க வேண்டும் என டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் எண்ணெய் நிறுவன உயர் அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஐ.ஓ.சி நிறுவன உயர் அதிகாரிகளுக்கு தென் மண்டல எல்.பி.ஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இ மெயில் மூலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடிதம் அனுப்பப்பட்டது. அதில் நிலுவையில் உள்ள வாடகை பாக்கியை தராவிட்டால் போராட்டத்தில் ஈடுபட போவதாக எச்சரித்திருந்தனர். இந்நிலையில் ஐ.ஓ.சி நிறுவனம் வாடகை பாக்கியை வழங்காததால் இன்று காலை முதல் ஐ.ஓ.சி நிறுவனத்திற்கு இயக்கப்படும் 1,000 எல் பி.ஜி கேஸ் டேங்கர் லாரிகள் லோடு ஏற்றாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதாக தென் மண்டல எல்.பி.ஜி கேஸ் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் திரு சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அமெரிக்கா ஈரான் இஸ்ரேல் போர் காரணமாக சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருகிறது. எல்.பி.ஜி டேங்கர் லாரி வேலை நிறுத்தம் காரணமாக தென் மாநிலம் முழுவதும் கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும்.
இதையும் படிங்க: மகளிருக்கு ஆண்டுதோறும் ரூ.36,000 வழங்கப்படும்... ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி...!
இதையும் படிங்க: தெருவில் கையேந்திய திருநங்கைகள் இன்று... மிஸ் திருநங்கை நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பொன்முடி பேச்சு...!