×
 

#BREAKING கனமழை எதிரொலி... இந்த 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை...!

கனமழை எதிரொழியாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 

கனமழை எதிரொழியாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 

இன்று முதல் வடகிழக்கு பருவமழை, தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள், கேரளா, மாஹே, தெற்கு உள் கர்நாடகம், ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திர பிரதேச  பகுதிகளில் வரும் தொடங்கக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு முதலே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களிலும் பல்வேறு பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் எதிரொழியாக தற்போது நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

நேற்று இரவு முதல் தென்மாவட்டங்களான மதுரை முதல் மற்றும் தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழையானது பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தின் புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய வள்ளியூர், பணங்குடி மற்றும் அம்பாசமுத்திரம் பகுதிகளில் அதிக அளவில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.  இதனால் நெல்லையில் தாழ்வான பகுதிகளில் இருக்கக்கூடிய பள்ளிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. அதன் காரணமாக பள்ளிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் எனவும் முன்னச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை விடப்படுவதாகவும் மாவட்ட ஆட்சிய சுகுமார் அறிவித்துள்ளார். 

இதையும் படிங்க: நாளை முதல் ஆட்டம் ஆரம்பம்... தீபாவளி அன்று வெளியானது முக்கிய எச்சரிக்கை...!

இதேபோல் தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இந்தத் தொடர் மழை காரணமாக பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் சூழ்நிலை இருக்கக்கூடிய காரணத்தினால்  அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

மாணவர்களின் பாதுகாப்பு கருதி இன்று ஒருநாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத்தும், தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோரும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 

இதையும் படிங்க: #rainalert: வெளுக்க போகுது மழை... குடை எடுத்தாச்சு... 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share