வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு ›

கல்யாணத்துக்கு பொண்ணு கெடைக்கல சாமி… நொந்து போன இளைஞர்கள்… பிரம்மச்சாரி மடம் கேட்டு வேதனை…!

திருமணத்திற்கு பெண் கிடைக்காததால் பிரம்மச்சாரி மடம் கேட்டு இளைஞர்கள் மனு கொடுத்தனர்.

தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பல மாநிலங்களிலும், குறிப்பாக நகர்ப்புறங்களில் வளர்ந்த 90ஸ் கிட்ஸ் இளைஞர்கள், திருமணம் தாமதமாவதால் ஏற்படும் விரக்தி இப்போது ஒரு மறைமுகமான சமூக நோயாக உருவெடுத்திருக்கிறது. இது வெறும் பையன் கல்யாணம் ஆகலயே என்று பெற்றோர் புலம்புவதோடு முடியவில்லை. ஆழமான உளவியல், உடலியல், சமூகப் பிரச்சினைகளாக உருமாறியிருக்கிறது. முதலில் புரிந்துகொள்ள வேண்டியது, 90ஸ் கிட்ஸ் என்பவர்கள் இந்தியாவின் மிகவும் குழப்பமான தலைமுறை.

இவர்கள் படிக்கும்போது கல்வியும் வேலையும் மட்டுமே வாழ்க்கை என்று சொல்லி வளர்க்கப்பட்டார்கள். 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, இன்ஜினியரிங், வேலை என்று ஓடினார்கள். 2014-15ல் கல்லூரி முடித்து வேலைக்குச் சென்றபோது, பொருளாதார வளர்ச்சி தேமேயென்று இருந்தது. இப்போது 30-35 வயதில் இருக்கும் இவர்களுக்கு திடீரென கல்யாணம் என்ற பிரச்சினை மலைபோல வந்து நிற்கிறது.

பல இளைஞர்கள் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் மனவிரத்தியின் உச்சத்தில் இருக்கின்றன. இந்த நிலையில் திருமணத்திற்கு பெண் கிடைக்காததால் பிரம்மச்சாரி மடம் கட்டித்தாங்க எனக் கூறி இளைஞர்கள் மனு கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கர்நாடகா, ரள்ளிகா கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திருமணத்திற்கு பெண் கிடைக்காத விரக்தியில், தங்களுக்கு பிரம்மச்சாரி மடம் கட்டித்தர வேண்டும் என பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு மனு அளித்த வினோத சம்பவம் நடந்துள்ளது.

இதையும் படிங்க: ஸ்வயம் தேர்வுக்கு தமிழ்நாட்டிலேயே சென்டர்கள்… அநீதி தடுக்கப்பட்டதாக MP சு.வெங்கடேசன் பெருமூச்சு…!

விவசாய குடும்பத்தை சேர்ந்த தங்கள் மகன்களுக்கு யாரும் பெண் தர முன்வரவில்லை என பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இந்த விஷயத்தை தாசில்தார் கவனத்துக்கு கொண்டு செல்வதாக பஞ்சாயத்து நிர்வாகம் உறுதி அளித்ததாக தெரிகிறது. 

இதையும் படிங்க: தமிழ்நாட்டுக்கே பெருமை… ஐ.நா. விருது பெற்ற சுப்ரியா சாகுவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து…!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள் ›

தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी