போதும் சாமி... ரீல் அந்து போச்சு! மேயரை பந்தாடும் விமர்சனங்கள்..!
தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டு தற்போது உணவு பரிமாறுகிறாரே என சென்னை மேயர் பிரியா மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
பணி நிரந்தரம், தனியார் மையமாக்குதலுக்கு எதிர்ப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி 13 நாட்களாக தூய்மை பணியாளர்கள் சென்னை ரிப்பன் மாளிகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற சமூக முடிவு ஏற்படவில்லை. பொதுமக்களுக்கு ஏற்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதை அடுத்து தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டது. கலைந்து செல்ல மறுத்த தூய்மை பணியாளர்களை வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்தனர். பல மணி நேரம் அடைத்து வைத்திருந்து பின்பு விடுவிக்கப்பட்டனர். தமிழக அரசு தங்களுக்கு நீதி கிடைக்க வழிவகை செய்யவில்லை என்றும் திமுக அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும் காவல்துறை அராஜக போக்குடன் செயல்படுவதாகவும் தூய்மை பணியாளர்கள் குற்றம் சாட்டினர்.
அது மட்டுமல்லாமல் சென்னை மாநகர மேயர் பிரியாவை கடுமையாக விமர்சித்து இருந்தனர். மேலும் அமைச்சர் சேகர்பாபுவையும் கடுமையாக சாடினர். சென்னை மேயர் பிரியா பின்புற வழியாக வந்து செல்வதாகவும், என்ன நடக்கிறது என வந்து கூட கேட்கவில்லை என்றும் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதையும் படிங்க: சொல்லுங்கய்யா... எங்கள இப்படி பாடா படுத்துறாங்க! சீமானிடம் கதறிய தூய்மை பணியாளர்கள்..!
மேயர் பிரியாவிற்கு எதுவுமே பேச தெரியவில்லை என்றும் குற்றம் சாட்டினர்m குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தூய்மை பணியாளர்களுடன் தேநீர் அருந்தினார்.,உணவு சாப்பிட்டார்., எனக் கூறிய கருத்து பல விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று தூய்மை பணியாளர்களின் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை தொடர்ந்து அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா உள்ளிட்டோர் தூய்மை பணியாளர்களுக்கு உணவுகளை பரிமாறினர். அங்கு தூய்மை பணியாளர்களை அடித்து அராஜக போக்குடன் கைது செய்ய வைத்து விட்டு இங்கு வந்து உணவு பரிமாறுகிறாரே! போதும் சாமி…உங்க ரீல் அந்து போச்சு என்று பல விமர்சனங்கள் தற்போது முன்வைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: திருடுறவன், கொள்ளை அடிக்கிறவன்-லாம் நல்லா இருக்கான்! கதறி அழும் தூய்மை பணியாளர்கள்..!