×
 

திருடுறவன், கொள்ளை அடிக்கிறவன்-லாம் நல்லா இருக்கான்! கதறி அழும் தூய்மை பணியாளர்கள்..!

வேலைக்காக தானே நாங்கள் போராடுகிறோம் என தூய்மை பணியாளர்கள் கதறி அழுதது காண்போரை கவலையடைய செய்கிறது.

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 13 நாட்களாக தூய்மை பணியாளர்கள் போராடி வருகின்றனர். சென்னை ரிப்பன் மாளிகை அருகே போராடிவரும் தூய்மை பணியாளர்களிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சமூக முடிவு ஏற்படாத நிலையில் போராட்டம் தொடர்ந்தது.

தூய்மை பணியாளர்கள் போராட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி வழக்கு தொடரப்பட்டது. தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் கலைந்து செல்ல மறுத்துவிட்டனர். நீதிமன்ற உத்தரவை ஏற்று அனுமதித்த இடத்தில் போராட வேண்டும் என்றும் ரிப்பன் மாளிகை முன்பு இருந்து அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் என்றும் போலீசார் எச்சரித்தனர். 

நீதி கிடைக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று தூய்மை பணியாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்த நிலையில், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி தூய்மை பணியாளர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து முழுக்கங்களை எழுப்பிய நிலையில், போலீஸ் வாகனங்களில் வலுக்கட்டாயமாக தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

இதையும் படிங்க: இப்படி ARREST பண்ண குண்டர்களா? நக்சலைட்டுகளா? இன்னும் எட்டு மாசம் தான்.. கதை க்ளோஸ்! EPS ஆவேசம்..!

இந்த நிலையில், நாங்கள் வேலை தானே கேட்கிறோம் என்றும் உங்கள் பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும், சாப்பிட வேண்டும், வாடகை கொடுக்க வேண்டும் என எவ்வளவோ பிரச்சனை உள்ளது என தூய்மை பணியாளர்கள் கூறினர்.

நாங்கள் என்னம்மா தப்பு செய்தோம்., வேலைக்காக தானே வந்து அமர்ந்தோம்., வேறு ஏதேனும் தவறு செய்தோமா என்றும் கதறி அழுதனர். கடவுளுக்கு கூட கண் இல்லை என்று அழுது புலம்பிய தூய்மை பணியாளர்கள், திருடுறவன், பொய் சொல்றவன், கொள்ளை அடிக்குறவனுக்கு தான் கடவுள் கண் திறப்பதாக கூறினர். இவ்வளவு தூரம் ஆகிவிட்டது., நீதி கிடைக்காமல் செல்ல மாட்டோம் என்றும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: போலீஸ் அராஜகம் பண்ணுது! உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் முறையீடு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share