×
 

COLDRIF மருந்து… லைசன்ஸ் கொடுத்ததே ADMK ஆட்சி தான்… கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது அமைச்சர் மா.சு. பதில்…!

இருமல் மருந்து குடித்து 25 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதிலளித்து பேசி உள்ளார்.

கோல்ட்ரிப் இருமல் மருந்து குடித்ததில் 

25 குழந்தைகள் மரணம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டது. இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்து பேசினார். சர்ச்சைக்குரிய மருந்து நிறுவனத்திற்கு அதிமுக ஆட்சியில் தான் உரிமம் வழங்கப்பட்டது என தெரிவித்தார். யாரேனும் கோல்ட்ரிப் மருந்து வாங்கி இருந்தால் பயன்படுத்த வேண்டாம் என உத்தரவிட்டோம் என்றும் மருந்து உரிமையாளர்கள் மீது கடும் குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தியை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் மருந்து ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சீல் வைத்துள்ளது என்றும் குழந்தைகள் இருந்து 25 நாட்களுக்கு பிறகு தான் தமிழகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது என கூறினார்.

இதையும் படிங்க: கோல்ட்ரிப் மருந்து ஆலை தற்காலிகமாக மூடல்... அமைச்சர் மா.சு. விளக்கம்...!

ஶ்ரீசன் ஃபார்மா நிறுவனத்தின் கோல்ட்ரிப் இருமல் மருந்து தமிழகம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் குழந்தைகள் இறப்பு குறித்து தெரிய வந்ததும் மருந்து தயாரிப்பு நிறுத்தப்பட்டு நிறுவனத்திற்கும் சீல் வைக்கப்பட்டது எனவும் தெரிவித்தார். நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் இந்த மருந்தை நல்ல மருந்து என்று கூறியுள்ளார் என தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் உள்ள மருந்து உற்பத்தி நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தனியார் மருந்து நிறுவனங்கள் வாங்கி உள்ளார்களா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் எட்டு நாட்களில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம் என்றும் தெரிவித்தார். குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் இந்த மருந்தை பயன்படுத்தவில்லை எனவும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்தார். மத்திய பிரதேச அரசு உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்திருந்தால் உயிரிழப்புகளை குறைத்து இருக்கலாம் என்றும் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் 125 மருந்துகளை விற்பனை செய்யவும் தடை விதித்துள்ளதாக அவர் கூறினார்.

இதையும் படிங்க: கோல்ட்ரிப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு கொடுக்காதீங்க... மா. சு. எச்சரிக்கை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share