வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

யாரையும் பலிகடா ஆக்குற அவசியம் எங்களுக்கு இல்ல… பொறுப்பா இருங்க – முதல்வர் ஸ்டாலின்…!

கரூர் சம்பவத்தில் யார் மீதும் பழி சுமத்தும் நோக்கம் இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கரூரில் பிரச்சார மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் பல்வேறு அரசியல் விமர்சனங்களை எதிர்கொண்டது. 

இந்த நிலையில் கரூர் சம்பவம் தொடர்பாக இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவை தொடங்கியதும் முதலமைச்சர் ஸ்டாலின் கரூர் சம்பவம் தொடர்பாக முழு விளக்கத்தை அளித்தார். விஜய் தாமதமாக வந்ததால் நிலைமை மோசமானது என்று முதலமைச்சர் கூறியிருந்தார். தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு கேள்விகளை முன் வைத்தார். காரசார விவாதம் நடைபெற்ற நிலையில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்புச் செய்தனர். பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அரசின் பாதுகாப்பு குறைபாடு தான் கரூர் சம்பவத்திற்கு காரணம் என்று பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார். 

இந்த நிலையில், கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். எனினும், திட்டமிட்டு அரசு மீது பொய்களைச் சிலர் பரப்பும்போது, நடந்த உண்மையை விளக்க வேண்டியது கடமையாகிறது என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாட்டிலுக்கு பத்து ரூபா… அப்பதான் விஜய் மேல செருப்பு வீசுனாங்க… நயினார் ஓபன் டாக்..!

இனி இப்படி நிகழாமல் தடுப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வகுத்து வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்றும் தெரிவித்தார். அனைத்தையும் விட மனித உயிர்களே விலைமதிப்பற்றது என்ற பொறுப்புணர்வுடன் அனைத்துத் தரப்பினரும் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க: விஜயை வேடிக்கை பார்க்கவே மக்கள் கூடினார்கள்… நாங்க நல்லது தான் செஞ்சோம்… பேரவையில் அமைச்சர் ரகுபதி விளக்கம்…!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी