×
 

பட்ஜெட் விவாதம்..! தவெக அரசை சீண்டிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்... பேரவையில் காரசார விவாதம்..!!

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் திமுக எம்எல்ஏ எம் ஆர் கே பன்னீர்செல்வம் பேசினார்.

இன்றைய சட்டமன்ற கூட்டத் தொடரில் பட்ஜெட் மீதான விவாதத்தில் திமுக எம்எல்ஏ எம் ஆர் கே பன்னீர்செல்வம் பேசினார். அப்போது நெல், கரும்புக்கான ஊக்கத்தொகை தொடர்பாக தமிழக வெற்றி கழகம் மற்றும் திமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது. பாமகவின் நிழல் பட்ஜெட்டில் இருந்து கருத்துக்களை பெற்று என எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்தார். நான் முதல்வன் திட்டத்தால் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆக அதிகம் பேர் பயிற்சி பெறுகின்றனர் என்று கூறினார்.

தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி 1.30 கோடி பெண்களுக்கு திமுக அரசு உரிமை தொகை கொடுத்ததாக தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு 19 ஆயிரத்து 500 கோடி ரூபாய் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என தெரிவித்தார். விவசாய கடன் முழு தள்ளுபடி என நாங்கள் சொல்லவில்லை என்றும் நீங்கள் தான் சொன்னீர்கள் எனவும் கூறியுள்ளார்.

எவ்வளவு கடன் தள்ளுபடி செய்ய முடியும் என்பது தெரிந்துதான் வாக்குறுதி அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். 21,000 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்கிறோம் என்று கூறிவிட்டு பெரும் 6000 கோடி மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டு பேசினார். திமுக ஆட்சியின் ஐந்து ஆண்டு காலத்தில் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்றும் திமுக ஆட்சியில் திடீர் திடீரென மழை பெய்தது என்றும் தமிழக வெற்றிக்கு அழகு ஆட்சியில் மழையே பெய்யவில்லை எனவும் கூறினார்.

இதையும் படிங்க: நெல், கரும்பு விவசாயிகளுக்கு டபுள் டமாக்கா..!! ஊக்கத்தொகை அதிகரிப்பு... முதல்வர் விஜய் பேரவையில் அறிவிப்பு..!!

விவசாயிகளுக்கான சிறப்பு ஊக்கத் தொகையை படிப்படியாக தான் திமுக அரசு உயர்த்தியது என்று அமைச்சர் வினோத் பதில் கொடுத்தார். ஆர்பிஐ விதிகளை சுட்டிக்காட்டி அமைச்சர் விளக்கம் கொடுத்த நிலையில் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அதற்கு பதில் அளித்து பேசினார். 

இதையும் படிங்க: “தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடுவது தமிழன்னைக்கு மரியாதை” ..! விஜய் தீர்மானத்தை ஆதரித்த இபிஎஸ்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share