நெல், கரும்பு விவசாயிகளுக்கு டபுள் டமாக்கா..!! ஊக்கத்தொகை அதிகரிப்பு... முதல்வர் விஜய் பேரவையில் அறிவிப்பு..!!
நெல் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அதிகரித்து முதல்வர் விஜய் அறிவித்தார்.
நெல் மற்றும் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அதிகரித்து முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் உரையாற்றினார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிதிநிலைக் கூட்டத் தொடர் அமர்வு ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கியது. புதிய அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கை அன்று நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேளாண்மை நிதிநிலை அறிக்கை, பொது விவாதங்கள், இரங்கல் தீர்மானங்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவல்கள் நடைபெற்று வந்தன.
இந்தக் கூட்டத் தொடர் செப்டம்பர் 8 வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி சட்டப்பேரவை கூடியபோது முதல்வரின் முன்னெடுப்பில் ஒரு முக்கிய தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான இந்தத் தீர்மானம் இந்தக் கூட்டத் தொடரில் முதல் வரிசையில் வைக்கப்பட்ட தனித் தீர்மானமாக அமைந்தது. முதல்வர் இதை நேரடியாக முன்மொழிந்தார். தொடர்ந்து சட்டமன்றத்தில் தீர்மானத்தை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர்களால் உரை நிகழ்த்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நெல் மற்றும் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை அதிகரிக்க முடிவு செய்திருப்பதாக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்தார். குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் சன்னரக நெல்லுக்கு 2750 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்தார். பொது நெல்லுக்கு குவின்டாலுக்கு 2600 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: “தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடுவது தமிழன்னைக்கு மரியாதை” ..! விஜய் தீர்மானத்தை ஆதரித்த இபிஎஸ்..!!
வரலாற்றிலேயே முதல்முறையாக நெல்லுக்கான ஊக்கத்தொகை 156 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது இதுவே முதன்முறை என்று கூறினார். கரும்புக்கான ஊக்கத்தொகை தன்னுக்கு 709 ரூபாய் உயர்த்த படும் என்ற முதல்வர் விஜய் அறிவித்தார். மத்திய அரசு தரும் ஊக்கத்தொகையுடன் சேர்த்து உருட்டன் கரும்புக்கான ஊக்கத்தொகையாக விவசாயிக்கு நான்காயிரம் ரூபாய்க்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "எங்கும் தமிழ்"..! தமிழுக்கு தனி மரியாதை..! சட்டப்பேரவையில் CM விஜய் கொண்டு வந்த முக்கிய தீர்மானம்..!!