×
 

அதிகாலையில் பயங்கரம்.. 3 மகள்களை வெட்டிக் கொன்று தந்தை விபரீத முடிவு.. அதிர்ச்சி பின்னணி...!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கடன் தொல்லையால் மூன்று மகள்களை வெட்டி கொன்றுவிட்டு தந்தை விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.  

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மங்களபுரம் அருகே உள்ள வேப்பம்கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி பாரதி. இந்த தம்பதியினருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் வழக்கம் போல் கோவிந்தராஜ் தனது குழந்தைகளுடன் நேற்று இரவு உணவு உண்ட பின் மனைவியை தனது ஆண் குழந்தையுடன் படுக்கை அறையில் உறங்க சென்றதாகவும், கோவிந்தராஜ் மற்றும் மூன்று பெண் குழந்தைகள் வீட்டின் அறையில் உறங்கி கொண்டிருந்துள்ளனர். 

திடீரென்று அதிகாலை மூன்று மணி அளவில் கோவிந்தராஜ் தனது மனைவி உறங்கி கொண்டிருந்த அறையை பூட்டிவிட்டு, ஹாலில் படுத்திருந்த மூன்று பெண் குழந்தைகளான பிரதிக்ஷா, ஸ்ரீ ரிதிகா ஸ்ரீ, தேவஸ்ரீ ஆகியோரை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். பின்னர் அவரும் பூச்சி மருந்து அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு மனைவி பாரதி கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்துள்ளனர். அப்போது குழந்தைகள் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள்,  மங்களபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

முதற்கட்ட விசாரணையில், கோவிந்தராஜ் கடன் தொல்லையால் மூன்று பெண் பிள்ளைகளையும் வெட்டி கொன்றதாக கூறப்படுகிறது. தற்போது பெற்ற மூன்று பெண் குழந்தைகளை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தந்தையும் கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

இதையும் படிங்க: உயிரே போனாலும் ஆக.13 முதல் மூலிகை பெட்ரோல் விநியோகம்... அண்ணாமலைக்கு ராமர் பிள்ளை வைத்த திடீர் கோரிக்கை...!

இதையும் படிங்க: சிக்கிய 2 பக்க கடிதம்... முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலையில் திடீர் ட்விஸ்ட்... 7 பேர் மீது அதிரடி நடவடிக்கை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share