வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

காதலிப்பதாக கூறி 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை..! குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை..!

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து விவகாரத்தில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே காதலிப்பதாக கூறி 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருமளவு அதிகரித்து இருப்பது பெரும் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

வயது வித்தியாசம் பாராமல் நடக்கும் பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. இரண்டு மாத குழந்தை முதல் 80 வயது மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சம்பவங்கள் நாள்தோறும் வெளிவந்து கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் அதனால் தான் பல குற்றங்கள் நடைபெறுவதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சிக்கு செல்லும் இடம் இது போன்று மட்டுமல்லாது வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கூட பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படுகிறது. சிறிய குழந்தை முதல் முதியவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 

இதையும் படிங்க: நெல்லைக்கு செல்ல டிக்கெட் இல்லையா? நாளை எழும்பூரில் இருந்து முன்பதிவில்லாத மெமு ரயில் இயக்கம்!

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே கடந்த 2019ம் ஆண்டு காதலிப்பதாகக் கூறி 13 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 30 வயதான ரமேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.மேலும் குற்றவாளிக்கு ரூ.6000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்கவும் அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. 

இதையும் படிங்க: நெல்லையில் நீடிக்கும் தாமதம்! 22 மணி நேரமாகியும் முழுமையான வாக்கு சதவீதத்தை வெளியிடாமல் தேர்தல் ஆணையம் தாமதம்!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी