வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

கூட்டுறவு அங்காடிகளில் ரூ.200-க்கு மளிகைத் தொகுப்பு..! மக்களுக்காக தான்..!! அமைச்சர் காந்திராஜ் விளக்கம்.!!

பொன்னேரியில் அமைச்சர் காந்திராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

செங்குன்றத்தில் 10 பொருட்களை கொண்ட சிறப்பு மளிகை பொருட்கள் ரூ.200க்கு விற்பனை செய்யும் திட்டத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் தொடங்கி வைத்தார். கூட்டுறவு அங்காடிகளில் தரமான சன்ன ரக அரிசி வழங்கடுவதாக அமைச்சர் விளக்கம் அளித்தார். தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு அங்காடிகளில் குறைந்த விலையில் மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு, மிளகாய், தனியா, பூண்டு, புளி, கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், சோம்பு உள்ளிட்ட 10 பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் உள்ள மருதம் கூட்டுறவு சிறப்பு அங்காடியில் 10 பொருட்களை கொண்ட சிறப்பு மளிகை பொருட்கள் ரூ.200க்கு விற்பனை செய்யும் திட்டத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் தொடங்கி வைத்தார். திருவள்ளுவர் படம் அச்சிடப்பட்ட பையில் சிறப்பு மளிகை தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டன. கூட்டுறவுத்துறை செயலாளர் அமுதா உள்ளிட்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காந்திராஜ், 250 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக கூறினார்.

மக்கள் பயன் பெற வேண்டும் என்பதற்காகவே அத்யாவசிய பொருட்கள் தரமானதாக கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை செய்யப்படுவதாகவும், மக்கள் தானாக வந்து விரும்பி வாங்கி செல்வதாக கூறினார். சன்ன ரக அரிசி தரமற்றதாக உள்ள கேள்விக்கு, குடிமைப் பொருள் வழங்கல் துறையிலிருந்து வழங்கப்படுவதாகவும் தரமான அரிசியே விநியோகம் செய்யப்பட்டு வருவதாக கூறினார். மேலும் அமைச்சர் வருவதற்கு முன்னர் காய்கறி விலை பட்டியல் குறைக்கப்பட்டதாக எழுந்த புகார் குறித்த கேள்விக்கு பதில் கொடுத்தார்.

இதையும் படிங்க: விடிந்ததுமே பேரதிர்ச்சி… 16 நாட்களாக பரிதவித்த உயிர்… பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண்ணுக்கு இறுதியில் நேர்ந்த கொடுமை…!

மளிகை உள்ளிட்ட பொருட்கள் பெரும்பாலும் விலை மாறாது எனவும், தினந்தோறும் கொள்முதல் விலைக்கு ஏற்ப காய்கறிகளின் விலை மட்டும் காலை நேரத்தில் நிர்ணயம் செய்யப்படும் என அமைச்சர் கூறினார். மேலும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். 

இதையும் படிங்க: 8 பேர் அமைச்சரானால் மட்டும் எல்லாம் மாறிவிடுமா? அகிலன் விவகாரத்தில் அமைச்சர் வன்னியரசு கேள்வி!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी