×
 

திமுக தாரைவார்த்த உரிமைகளை மீட்டோம்! 151 மருத்துவ இடங்கள் விவகாரத்தில் அமைச்சர் அருண்ராஜ் அதிரடி!

திமுக ஆட்சியில் தாரைவார்க்கப்பட்ட தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ இட உரிமைகளைத் தவெக அரசு மீட்டுள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் விளக்கியுள்ளார்.

திமுக ஆட்சிக் காலத்தில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்குத் தாரைவார்க்கப்பட்ட தமிழக மருத்துவர்களின் உரிமைகளைத் தவெக அரசு உச்ச நீதிமன்றச் சட்டப் போராட்டத்தின் மூலம் மீட்டெடுத்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள உயர் சிறப்பு (சூப்பர் ஸ்பெஷாலிட்டி - DM / M.Ch) மருத்துவப் படிப்பு இடங்கள் அகில இந்தியத் தொகுப்பிற்கு மாற்றப்படுவது தொடர்பாக எழும் விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள அமைச்சர் அருண்ராஜ்  கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்துக்கான உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்கள் தொடர்ந்து அகில இந்திய ஒதுக்கீட்டிற்குத் தாரைவார்க்கப்பட்டு வந்தன. குறிப்பாக, 2024-ஆம் ஆண்டில் 119 இடங்களும், 2025-ஆம் ஆண்டில் 145 இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு எவ்வித எதிர்ப்புமின்றி ஒப்படைக்கப்பட்டன.

ஆனால், இம்முறை 151 உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் காலியாக இருந்தபோதிலும், தமிழக அரசு அந்த இடங்களை உடனடியாக ஒப்படைக்க மறுத்துவிட்டது. தகுதி மதிப்பெண் (Percentile) குறைக்கப்படாது என்ற உறுதியான உத்தரவாதத்தை மத்திய அரசு தந்தால் மட்டுமே அந்த இடங்கள் ஒப்படைக்கப்படும் என்பதில் தமிழக அரசு மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தது.

இதையும் படிங்க: மேகதாது அணை பிரச்சினை... உச்ச நீதிமன்றத்தை நாட துரைமுருகன் வலியுறுத்தல்!

திமுக ஆட்சிக் காலத்தில் விட்டுக்கொடுக்கப்பட்டுத் தாரைவார்க்கப்பட்ட தமிழகத்தின் உரிமைகளைத் தவெக அரசு உச்ச நீதிமன்றத்தில் நடத்திய தொடர் சட்டப் போராட்டத்தின் மூலமே மீட்டெடுத்துள்ளது. தமிழக மருத்துவர்களின் உரிமையையும் மாநில நலனையும் பாதுகாப்பதில் எங்களது அரசு எப்போதும் உறுதியுடன் செயல்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நாங்கள் உழைக்க வந்தவர்கள், பிழைக்க வந்தவர்கள் அல்ல! திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆவேசம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share