×
 

டிட்வா புயல் பாதிப்பு: பாதிக்கப்பட்ட இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண உதவி!

டிட்வா புயல் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களைக் கப்பல் மூலம் தமிழக அரசு அனுப்புகிறது.

வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் இலங்கையைப் புரட்டிப் போட்டதால், இடைவிடாது கொட்டித் தீர்த்த மழையால் அந்நாடு வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கிறது. மழை நின்றபோதும் வெள்ளம் வடியாததால், அந்நாட்டு மக்கள் சொல்லொணாத் துயரத்தில் மூழ்கி உள்ளனர். 

இந்தப் புயல், மழை பாதிப்புகளில் இதுவரை இலங்கையில் 330-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர்.அண்டை நாடான இலங்கை இந்தப் பெரும் இயற்கை பேரிடரில் சிக்கித் தத்தளித்து வரும் சூழலில், இந்தியா உடனடியாக மீட்புப் பணியை மேற்கொள்ளத் தேசிய பேரிடர் மீட்புப் படையினரை இலங்கைக்கு உதவியாக அனுப்பியது. மேலும், தொடர்ந்து பல டன் நிவாரணப் பொருள்களையும் இந்தியா இலங்கைக்கு அனுப்பியுள்ளது.

இந்நிலையில், புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரணப் பொருள்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அனுப்புகிறார். இந்த நிவாரணப் பொருள்களில் அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

இதையும் படிங்க: கனமழை விடுமுறையை ஈடு செய்ய நடவடிக்கை: நாளை (டிச. 6) சென்னை பள்ளிகள் செயல்படும்! 

இதையும் படிங்க: சென்னைக்கு மிக அருகில் வலுவிழந்த 'டிட்வா' புயல்.. திருவள்ளூர், சென்னைக்கு 'ரெட் அலர்ட்'!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share