வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு ›

“இன்று முதல்”..! டாஸ்மாக் பார்களுக்கு திடீர் பூட்டு..! அதிரடி உத்தரவால் மது பிரியர்கள் அதிர்ச்சி..!

மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் பார்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட மதுக்கூடங்கள் தொடர்பான பிரச்சனை இன்று பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த பார்களுக்கான உரிமக் காலம் முடிவடைந்த நிலையில், டாஸ்மாக் நிர்வாகம் அனைத்து பார்களையும் மூட உத்தரவிட்டன. டாஸ்மாக் நிறுவனம் தமிழகம் முழுவதும் சுமார் 4,765 மதுக்கடைகளை நடத்தி வருகிறது. இவற்றில் சுமார் 2,000 முதல் 2,640 வரையிலான கடைகளுடன் இணைக்கப்பட்ட பார்கள் செயல்பட்டு வந்தன.

இந்த பார்களுக்கு வழங்கப்பட்ட இரண்டாண்டு ஒப்பந்தம் 2026 ஜனவரியில் முடிவடைந்தது. சட்டமன்றத் தேர்தல் காரணமாக அந்த ஒப்பந்தம் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த நீட்டிப்பு ஜூன் 30, 2026-உடன் முடிவுக்கு வந்தது. உரிமக் காலம் முடிவடைந்ததால், புதிய டெண்டர் அறிவிக்கப்படும் வரை பார்களை மூட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால் இன்று காலை முதல் அல்லது மாலை முதல் பல இடங்களில் பார்கள் மூடப்பட்டதாக அல்லது மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தகவல்கள் பரவின. பார்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் உரிமம் முடிந்ததால் டாஸ்மாக் பார்களை இன்றுடன் (ஜூலை 1) மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையும் படிங்க: திமுக வழியில் தவெக எடுத்த அதிரடி முடிவு… டாஸ்மாக் பார்கள் குறித்து வெளியானது முக்கிய அறிவிப்பு…!

டாஸ்மாக் பார்களுக்கான உரிமம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் மறு உத்தரவு வரும் வரை மூட ஆணை பிறப்பித்தது. காலையில் டாஸ்மாக் பார்களுக்கான உரிமம் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் உரிமம் முடிந்ததால் டாஸ்மாக் பார்களை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

இதையும் படிங்க: டாஸ்மாக்கில் கட்டிங்! 90ml 'டெட்ரா பேக்' விற்க முடிவு?! திமுக கைவிட்ட திட்டத்தை கையில் எடுக்கும் தவெக!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள் ›

தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी