அசால்டாக லஞ்சம்..? தீயாய் பரவிய வீடியோ..! இப்படியா வாங்குவாங்க..? தவெக நிர்வாகி விளக்கம்..!!
லஞ்சம் பெற்றதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவிய நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி வீரா விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச் செயலாளரும், மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவருமான வீரா என்பவருக்கு எதிராக லஞ்சம் வாங்கிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று வெளியான இந்த வீடியோவில், ஒரு ஒப்பந்ததாரர் வீராவின் அலுவலகத்தில் அவரிடம் ரூ.1.30 லட்சம் பணத்தை ஜிபே (UPI) மூலம் அளிப்பது பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் த.வெ.க.வுக்குள் மட்டுமின்றி, தமிழக அரசியல் வட்டாரங்களிலும் கடும் விமர்சனங்களைத் தூண்டியுள்ளது. வீடியோவில் காட்சியாகும் நிகழ்வு மாம்பாக்கம் பகுதியில் உள்ள வீராவின் அலுவலகத்தில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. சாலைப் பணிகள் தொடர்பான ஒப்பந்ததாரர் ஒருவர், பணிகளுக்கான தொகை விடுவிப்பு சம்பந்தமாக வீராவைச் சந்தித்தபோது இந்தப் பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.
வீடியோ பரவிய சில மணி நேரங்களுக்குள் பல்வேறு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் இது பெரும் கவனத்தைப் பெற்றது. பலர் இதை த.வெ.க.வின் ஊழல் முகமாகச் சுட்டிக்காட்டினர்.இந்தக் குற்றச்சாட்டுக்கு வீரா உடனடியாக விளக்கம் அளித்தார். “லஞ்ச பணத்தை இப்படி ஆபீஸுக்கு வர வைத்து வாங்குவார்களா? அதுவும் என் ஜிபே நம்பரிலேயே வாங்குவேனா? என்கிட்ட கைமாத்தா வாங்குன காசைத் திருப்பிக் கொடுத்தாரு.. அவ்வளவுதான்" என்றார்.
இதையும் படிங்க: கம்யூனிஸ்ட் கட்சிக்கு வேட்டு?! கச்சிதமாய் காய் நகர்த்தும் திமுக! கூட்டணியை முறித்ததால் ஆத்திரம்?
இது முழுக்க முழுக்க தி.மு.க.வோட சதி” என்று அவர் தெரிவித்தார். ஒப்பந்ததாரரிடமிருந்து அவர் முன்பு கடன் வாங்கிய பணத்தைத் திருப்பிப் பெற்றதே தவிர, அது லஞ்சம் அல்ல என்று வலியுறுத்தினார். முதலமைச்சர் விஜயின் பெயரைக் கெடுக்க தி.மு.க. திட்டமிட்டு இந்த வீடியோவை வெளியிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: தன் கட்சி ஊழலையே தட்டிக் கேட்க முடியாத CM..! லஞ்ச வேட்டை..! நயினார் தாக்கு.!