×
 

பொள்ளாச்சி பாலியல் வழக்கு.. இருவர் இழப்பீடு பெற விண்ணப்பம்.. மற்ற பெண்களுக்கும் துளிர் விடும் நம்பிக்கை..!

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக 85 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் இரண்டு பெண்கள் இழப்பீடு கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

பொள்ளாச்சியில் சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில், பல பெண்கள் கொடூரமான முறையில் பாதிக்கப்பட்டனர். இந்த வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்தனர். 

இந்த நிலையில் பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் மூலம் இழப்பீடு வழங்கப்பட்ட விவரங்கள் தெரிய வந்து உள்ளன. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட 8 பெண்களில் இருவர் தற்போது இழப்பீடு பெற விண்ணப்பித்து உள்ளனர்.

முன்னதாக, இந்த வழக்கில் குற்றவாளிகள் அபகரித்த தங்க நகைகள் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும், நீதிமன்றம் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தம் 85 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டு இருந்தது. 

இதையும் படிங்க: பொள்ளாச்சி தீர்ப்பு ஒரு எச்சரிக்கை..! கொடுங்காயத்திற்கு இடப்பட்ட மாமருந்து.. திருமாவளவன் ஆவேசம்..!

அதன்படி, ஒவ்வொரு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. முதல் பெண்ணுக்கு 2 லட்சம், இரண்டாவது பெண்ணுக்கு 15 லட்சம், மூன்றாவது பெண்ணுக்கு 10 லட்சம், நான்காவது பெண்ணுக்கு 10 லட்சம், ஐந்தாவது பெண்ணுக்கு 8 லட்சம், ஏழாவது பெண்ணுக்கு 15 லட்சம், எட்டாவது பெண்ணுக்கு 25 லட்சம் என இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களில் இருவர் தற்போது மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தில் தங்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற விண்ணப்பித்து உள்ளனர். நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு ஆறுதலாக அமைந்தது. தற்போது, மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தில் இருவர் விண்ணப்பித்து இருப்பது, மற்ற பாதிக்கப்பட்ட பெண்களும் விரைவில் விண்ணப்பித்து தங்களுக்குரிய இழப்பீட்டைப் பெறுவதற்கான நம்பிக்கையை அளிக்கிறது.

இந்த சம்பவம், பாலியல் வன்கொடுமையின் கொடூரத்தையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டியதன் அவசியத்தையும் மீண்டும் ஒருமுறை உணர்த்துகிறது. இதனிடையே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவருக்கும், கூடுதலாக தலா 25 லட்சம் ரூபாய் என, நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க உத்தரவிட்டு உள்ளார்.

பொள்ளாச்சி வழக்​கில் கடந்த 13-ம் தேதி கோயம்​புத்​தூர் மகளிர் நீதி​மன்​றம் வழங்​கிய தீர்ப்​பில், பொள்​ளாச்சி பாலியல் வன்​கொடுமை சம்​பவத்​தில் பாதிக்​கப்​பட்ட பெண்​களுக்கு மொத்​த​மாக ரூ.85 லட்​சம் வழங்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. இந்த வழக்​கில் பாதிக்​கப்​பட்ட பெண்​கள் தைரியமாக முன்​வந்து புகார் அளித்​தது மட்​டுமல்​லாமல் நீதி​மன்ற விசா​ரணைக்கு ஒத்​துழைப்​பு அளித்ததன் அடிப்​படை​யிலேயே இந்த வழக்​கில் குற்​ற​வாளி​களுக்கு தண்​டனை கிடைத்​துள்​ளது. 

பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு நியா​யம் கிடைத்​துள்​ளது. அத்​தகைய நியா​யத்​துக்காக துணிச்சலுடன் போராடிய பெண்​களின் தைரி​யம் பாராட்​டுக்​குரியது. அந்த வகை​யில், நீதி​மன்றம் உத்​தர​விட்ட மொத்த நிவாரண தொகை ரூ.85 லட்​சத்​துக்​கும் கூடு​தலாக பாதிக்​கப்​பட்ட பெண்​களுக்கு தலா ரூ.25 லட்​சம் என நிவாரண தொகையை உயர்த்தி வழங்க முதல்​வர் ஸ்டாலின் உத்​தர​விட்​டுள்​ளார்​. 

இதையும் படிங்க: கூச்சமே இல்லைல..! பொள்ளாச்சி வழக்கில் திமுகவுக்கு என்ன பங்கு? மு.க.ஸ்டாலினை உரித்தெடுத்த இபிஎஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share