டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்த நிலையில், காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, உரிமம் வழங்கியது ஆகியவற்றில் முறைகேடு நடந்ததாகக் கூறி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கக்கூடிய கார்த்திக் என்பவர் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்தியன் முன்வைத்தார்.
இதையும் படிங்க: எந்தெந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன? 717 கடைகளின் பட்டியல் வெளியீடு..!!
ஆனால், மனுதாரர் தரப்பில், குதிரை பேர வழக்கில் ஜாமீன் பெற்று விடுதலையான நாளிலேயே தன்னை கைது செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, காவல்துறை தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 25ஆம் தேதிக்கு தள்ளிவைத்திருக்கிறார்.
இதையும் படிங்க: சொன்னபடியே செஞ்சாச்சு! 717 மதுக்கடைகள் மூடல் – முகவரியுடன் முழு லிஸ்ட் வெளியீடு!