பகுதி நேர ஆசிரியர்கள் தங்களுக்கு கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றக்கோரி போராடி வருகின்றனர். வாக்குறுதி எண் 181 ஐ நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இவர்கள் முக்கியமாக கலை, இசை, தையல், உடற்கல்வி போன்ற சிறப்புப் பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களாவர். தமிழகத்தில் சுமார் 12,000க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களது போராட்டத்தின் மையக் கோரிக்கை பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு ஆகும்.
இந்தப் போராட்டத்தின் பின்னணி 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி. இதை நிறைவேற்ற வில்லை எனக் கூறி ஆசிரியர்கள் போராடி வந்தனர். இதைத்தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆசிரியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், பகுதி நேர ஆசிரியர்களுக்கு 2500 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அறிவித்தார். 12,500 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் நிலையில் 15000 ரூபாயாக வழங்கப்படும் என்று தெரிவித்தார். அது மட்டுமல்லாது பத்தாயிரம் ரூபாய் மே மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: என்னென்ன கோரிக்கைகள்? ஆசிரியர்களுடனான பேச்சுவார்த்தையை தொடங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்..!
இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்ததும் ஆசிரியர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு வேண்டாம் என்றும் பணி நிரந்தரம் தான் தேவை எனவும் கூறி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடத்திய நிர்வாகிகள் போராட்டக் களத்திற்கு வராத நிலையில் செய்திகளை பார்த்து தெரிந்து கொண்ட ஆசிரியர்கள் பணி நிரந்தரம் தான் தேவை என்று திட்டவட்டமாக கூறி கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: என்ன பாத்தா அரசுக்கு பயமா? போராடும் ஆசிரியர்களை ஒடுக்குவது தான் உங்க மாடலா... கிழித்து தொங்கவிட்ட சீமான்..!