சென்னை வேளச்சேரியில் உள்ள விசிக தலைவர் திருமாவளவன் இல்லத்திற்கு சென்று அவரை முதல்வர் விஜய் சந்தித்துள்ளார். முதல்வர் விஜய் வருவதை அறிந்து வாசலில் காத்திருந்து பூங்கொத்து கொடுத்து திருமாவளவன் வரவேற்றார். தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளித்திருந்த நிலையில் திருமாவளவன் இல்லத்திற்கு சென்று முதல்வர் விஜய் வாழ்த்து பெற்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் பற்றிய தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க வேண்டும் என்று முதல்வர் விஜயிடம் கூறியதாகவும், அவரை சந்திக்க இருப்பதாக முதல்வர் விஜய் தன்னிடம் கூறியதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் நடக்கும் உட்கட்சி பிரச்சனை குறித்து நான் கருத்து கூற முடியாது என்றும் கூறியுள்ளார். ஜோதிடத்தை நம்புபவர்கள் மதவாத அரசியல் செய்வார்கள் என்று கூற முடியாது என்றும் தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் அதிமுக இருக்கிறது என்று கருதுகிறோம் எனவும் தெரிவித்துள்ளார். எஸ். பி. வேலுமணி அணிக்கும் வாக்குகள் செல்லுமா என சபாநாயகர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: BP எகிறுதே..! திக்.. திக்.. நிமிடங்கள்..! திருமா. பதிலுக்கு காத்திருக்கும் தமிழ்நாடு..!
ஈபிஎஸ் தலைமையிலான குழுவில் தான் அதிமுக கொரடா இருக்கிறார் என்றும் தெரிவித்திருக்கிறார். அரசியல் கட்சி தலைவர்களை முதல்வர் விஜய் சந்தித்து வருவது அரசியல் முயற்சியை காட்டுவதாக திருமாவளவன் தெரிவித்திருக்கிறார். தன்னுடைய வாழ்க்கை பற்றி முதல்வர் விஜய் கேட்டதாகவும் தன்னுடைய அனுபவங்களை அவருடன் பகிர்ந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: முடிவெடுக்காமல் இருக்கும் ஆளுநர்..!! விஜயை பதவியேற்க அனுமதிக்க வேண்டும்..!! திருமா வலியுறுத்தல்..!!