மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தீவிர வாக்காளர் பட்டியல் பொறுப்பு நடவடிக்கை தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தைக் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். முதலில் தேர்தல் ஆணையத்திற்கு தமிழக முதலமைச்சர் வலியுறுத்த வேண்டிய விஷயம் ஒன்று இருப்பதாகவும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் விடுதலை சிறுத்தை கட்சியின் வழக்கு தொடர்ந்து உள்ளதாக தெரிவித்தார்.
தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளா ஆகிய மூன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது அதிர்ச்சி அளிப்பதாகவும் இதை நடைமுறைப்படுத்தக் கூடாது எனவும் தெரிவித்தார். பீகாரில் வாக்குத்திருட்டு நடந்ததை போல் தமிழ்நாட்டிலும் நடைபெறும் என்றும் இதற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஒன்று திரண்டு எதிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பல்கலைக்கழகம் மசோதா சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்திய அவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்தார். உயர்கல்வித்துறை அமைச்சர் கோவை செழியன் மறுசீராய்வு செய்வதாக அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: சாதி வாரிய கணக்கெடுப்பு... திருமா, செல்வப்பெருந்தகையை சீண்டிய அன்புமணி...!
பாஜகவின் பொறுப்பில் இருந்து அண்ணாமலை வெளியேற்றப்பட்டதால் அரசியல் செய்வதற்கு களம் இல்லாமல் அவர் விரக்தி அடைந்துள்ளதாகவும், எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போல விடுதலை சிறுத்தைகள் பற்றிக்கு எதிராக அண்ணாமலை அவதூறு பேசி வருவதாகவும் விமர்சித்தார். எப்படி பிரச்சாரம் செய்தாலும் இனி பாஜக தலைமைக்கு இவர் மீது நம்பிக்கை வரப்போவதில்லை என்றும், ஆணவ படுகொலைக்கு புதிய சட்டம் ஏற்ற கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டதாகவும் சட்டமன்றத்தில் தமிழக முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: பிரம்மாண்ட படைப்பு "பெரியார் உலகம்"... ரூ.10 லட்சம் நிதி வழங்கிய திருமாவளவன்...!